Share

Sep 20, 2021

மிஸ்கின் அப்பா பெயர்?

 "ராஜநாயஹம், சைக்கோ படத்தில் கமலாதாஸ் போன்ற பெயர்கள் உண்டு. சிங்கம்புலி பெயர் ராஜநாய'ஹம்'. கம் இல்லை! ஏதாவது உள்குத்து இருக்குமோ?....தோணிச்சு!" 

இப்படி என் பெரு மதிப்பிற்குரிய பெரியவர் ஃபேஸ்புக் மெஸஞ்சரில் தெரிவித்தார். 


அவரே பின்னர் இரண்டு நாளில் 

"He has revealed in an interview... Rajanayaham was his father's name!"

அப்படியா? நான் இந்த மெஸ்ஸேஜ் பல மாதங்கள் கழித்து தான் கவனித்தேன். 

.. 

சிவாஜி நடித்து, கலைஞர் வசனத்தில்

 எல். வி. பிரசாத் இயக்கிய படம் 'இருவர் உள்ளம்'. 

இதில் ரங்காராவின் நண்பராக நடித்தவர் நடிகர்

 R. பாலசுப்பிரமணியம். 

படத்தில் இவருடைய பெயர் ராஜநாயஹம். ரங்காராவ் இவரை 'யோவ் ராஜநாயஹம்' என்று விளித்துப் பேசுவார். 

1940களின் வில்லன் நடிகர் இந்த பாலசுப்பிரமணியம். இவர் எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தா. 


கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்த 'காஷ்மோரா' படத்தில் கார்த்தியின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயர் 'ராஜ்நாயக்'.  இதையும் படம் பார்த்த சில நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். 

..... 


மிஷ்கின் பாடிய பாரதி பாடலை 

நான் திருப்பூரில் பாடியதுண்டு. 


200 குழந்தைகளுடன்

2014 டிசம்பர் 11ந்தேதி

அச்சம் தவிர், 

நையப்புடை, 

மானம் போற்று, 

ரௌத்திரம் பழகு

- பாரதியின் புதிய ஆத்திச்சூடி 


 

 - இயக்குனர் மிஷ்கின் பாடிய பாடலை 

நான் பாடினேன். 


பாரதியின் மீசை, முண்டாசு, கோட்டு, பஞ்சகச்சத்துடன் குழந்தைகள். 


ஒன்றாம் வகுப்பு துவங்கி

 எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள். 


நான் ஒவ்வொரு வரியாக பாட, 

குழந்தைகள் அதை தொடர்ந்து பாடினார்கள்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.