Share

Sep 21, 2021

நாற்பது வயதுக்கு மேல் உயிரோடு இருந்தே ஆக வேண்டும்

 நாற்பது வயதுக்கு மேல் 

உயிரோடு இருக்கக் கூடாதா? ஏன்யா? 


நாற்பது வயதுக்கு மேல், ஐம்பது வயதுக்கு மேல், அறுபது வயதுக்கு மேல் கூட 

வாழ்க்கை பலருக்கு பிரகாசமாக ஆகியிருக்கிறது. 


அறுபது வயது தான் 

முதுமையின் பால்யம்.  


அரசியலில் மிகப் பெரிய பொறுப்புகளை எழுபது வயதுக்கு மேல், எண்பது வயதுக்கு மேல் கண்டவர்கள் உண்டு. 


இலக்கியத்திலும், ஓவியத்திலும் அப்படியே. 

கலைஞர்கள் வாழ்வுக்கு

 வயது ஒரு பொருட்டே அல்ல. 

ஹாலிவுட் நடிகர்கள் வயதான பின்னும் சாதித்திருக்கிறார்கள். குழந்தை பெற்றிருக்கிறார்கள். 

செயல்படவும், சாதிக்கவும் 

வயது ஒரு பொருட்டேயில்லை 

என்பது மானுட மாண்பு.


கதே தன் ஜெர்மன்  'Faust' காவியத்தை 23 வயதில்  எழுத ஆரம்பித்து 82 வயது வரை எழுதிக்கொண்டே இருந்து முடித்தான். 


http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.