பெரும்பாக்கம்.
மொட்டை மாடியில் காலை நேரம்
வாக்கிங் போகும் போது..
Angels whisper to a man when he goes for a walk.
ஹெலிகாப்டர் வானில் செல்வதை
காண முடிகிறது.
ஊரையே கூப்பிட்டுக் கொண்டு தான் (என்னைப்பார், என்னைப் பார்) ஹெலிகாப்டர் போய்க்கொண்டு இருக்கிறது.
விண்ணில் அதிர்ந்தவாறு நகரும்
அதைப் பார்க்கும் போது
திகில், பதற்றம் ஏற்படுகிறது.
Helicopter doesn't fly, it vibrates so badly என்பதாக அமெரிக்க எழுத்தாளர் டாம் க்ளான்ஸி சொன்னது.
டாம் க்ளான்ஸி வீடீயோ கேம்ஸ் ஸ்பெஷலிஸ்ட்.
சினிமாவில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறுவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பாலயோகி, ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகருக்கெல்லாம் ஹெலிகாப்டரால் மரணம்.
பதவியில் இருக்கும் போதே இருவருக்கும்
இப்படி நேர்ந்தது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதை பார்ப்பது போல் கனவு கூட வந்திருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதியின் ஒரு நல்ல நாவல் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன'
தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியிருந்தார்.
இப்ப கொஞ்ச நாளா இங்க நல்லா கொழு கொழுன்னு ரண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் பல நூறு கோடி மோசடி விவகாரம் பரபரக்கிறது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.