சென்னையில் இலக்கியவாதி,
எழுத்தாளர் என்றெல்லாம் யாரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை.
அன்று கூத்துப்பட்டறையில் மதியம்
முழு நேர நடிகர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்.
கோயம்பேடு காவல் நிலையத்தில் ஃப்ரான்சிஸ் கிருபாவை நிரபராதி என்பதறிந்து விடுவிக்க இருப்பதை ஃபேஸ்புக் மூலம் அறியவந்தேன்.
கூத்துப்பட்டறையில் இருந்து அருகில் தான் காவல் நிலையம்.
ஃப்ரான்சிஸ் கிருபா அறிமுகம் கிடையாது. கவிதைகள் பரிச்சயம்.
ஆனாலும் பார்க்க விருப்பம். விடுவிக்கப்பட்டு கிருபா கிளம்பி விட்ட செய்தியையும் அறிந்தேன்.
எப்படி சந்திப்பது? கவிஞரை நான் பார்த்ததேயில்லை.
டிஸ்கவரி புக் ஹவுஸில் விசாரித்தால் தெரிய வரும் என்று தகவல். நான் அவ்வப்போது ஏதாவது நூல் வாங்கப் போவதுண்டு.
அங்கே வேடியப்பன் தம்பி சஞ்சய் எப்போதும் இருப்பார். வேடியப்பன் சாயலில் அப்படியே தம்பி.
அவரிடம் விசாரித்த போது ஃப்ரான்சிஸ் கிருபா எங்கிருக்கிறார் என்பது அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
சில நாளில் மேற்கு தொடர்ச்சி மலை லெனின் தற்செயலாக பார்த்த போது சொன்னேன். 'ஃப்ரான்சிஸ் கிருபாவை சந்திக்க வேண்டும்'
லெனின் பாரதி 'ஓய்வில் இருக்கிறார். இப்போது சந்திக்க முடியாது '
அதோடு கிருபாவை சந்திக்கும் முயற்சியை நிறுத்தி விட்டேன். முன்பே சொன்னபடி
இயல்புக்கு மாறாக கிருபாவை பார்க்க விரும்பியதற்கு உடனே முற்றுப்புள்ளி.
எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.