Share

Sep 11, 2021

கணேஷ் பாண்டியன் சாதனை

 'கண்ணே கலைமானே' உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து சீனு ராமசாமி இயக்கத்தில் வெளி வந்த படம். 

படத்தில் கதை நாயகி தமன்னா கண் பார்வையை இழந்து விடுகிறார். 

Leber’s hereditary optic neuropathy. அம்மா மூலம் தமன்னாவுக்கு வரும் பிரச்னை. 


கண்ணே கலைமானே படம் ஒரு inspiration ஆக ஒரு விஞ்ஞானி உணர்கிறார். 

ஜப்பானில் Genetics switch பற்றிய ஆய்வில் 18 ஆண்டுகளாக இருக்கும் கணேஷ் பாண்டியன் தான் அவர். 


Mito Chondrial diseases குறித்து ஒரு வெளிச்சம் காண அவருக்கு கண்ணே கலைமானே 

உந்து சக்தியாக இருந்திருக்கிறது. 


மரபணு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடையாது. 


கணேஷ் பாண்டியனுக்கு DNA மரபணு தான் Target. 


நியூக்ளியஸ் தலைமை செயலகம். இதில் உள்ள குறைபாடுகளுக்கு நிவர்த்தி செய்வதற்கு வேறு சில முறைகள் இருக்கிறது. 

மைட்டோ காண்ட்ரியா எலக்ட்ரிசிட்டி போர்ட் போல. 

பவர் கட் ஆனால் என்ன செய்ய முடியும்? 


உறுப்பு - திசுக்கள் - செல். 


செல்லை மாற்றியமைக்க தான் கணேஷ் ஆராய்ச்சி. 

 Cell -  basical unit. 


ஆறு வருடங்களுக்கு முன்பு கணேஷ் மகள் 

"மைட்டோ காண்ட்ரியாவில் சீரமைக்க முடியுமா?"

 Little girls are wiser than men. 


Switch on and repair. 


கெட்ட ஜீன்களால் தான் உடல் நோய்கள். 

கெட்ட ஜீன்களை switch off செய்து நல்ல ஜீன்களை switch on  செய்வது. 

இது வரை யாரும் இதை செய்ததில்லை. 


மரபணு குறைபாடுகளை சரி செய்வதில் முக்கிய வெற்றி கண்டிருக்கிறார் 

திருநெல்வேலி கணேஷ் பாண்டியன். 

சாதனை! 


இதன் மூலம் கண் பார்வை 

Leber’s hereditary optic neuropathyயையும் குணப்படுத்த முடியும். மரபணு சம்பந்தப்பட்ட இன்ன பிற நோய்களையும் சரி செய்ய முடியும். 

இன்னும் சில முடிவுகளை எட்ட கொஞ்சம் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.


கணேஷ் பாண்டியன் என்னுடைய நண்பர் ராமசாமி நமச்சிவாயத்தின் உடன் பிறந்த தம்பி. 

ராமசாமி நமச்சிவாயம் HDFCயில் 

ஒரு Vice president. 

என் எழுத்தில் ஈடுபாடு கொண்ட வாசகரும் கூட. 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.