Share

Sep 18, 2021

மன்மதக் கலை

 ’கல’

R.P.ராஜநாயஹம்


வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள். 


மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக பெருகியிருப்பதால் 

“ அது அப்படியில்ல, இப்படித்தான்..’’ என மறுத்து வேறு மாதிரி சொல்வார்கள்.


தொன்மங்களை எவ்வளவோ எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளால் நிரப்புவதுண்டு தான். 

ப்ரதீபா ரே என்ற ஒரிய எழுத்தாளரின் ‘யக்ஞசேனி’  நூலில் மகாபாரதத்தை 

ஒரு மாறுபட்ட கோணத்தில்

 திரௌபதி கர்ணன் மேல் மட்டுமல்ல, 

கண்ணன் மீதே காதல் கொண்டதாக எழுதியிருக்கிறார் என 

சிற்பி பாலசுப்ரமண்யம் ‘தி இந்து’வில் 

ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

இங்கே உள்ள மகாபாரத பண்டிதர்கள் “ ச்சீ..ச்சீ.. என்ன இது முறைகெட்டத்தனம்” என்று

 முகம் சுழிக்க வேண்டியது தான்.


இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி

 நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.


“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”


நான் சிறுவனாக இருக்கும்போது 

கரூரில் ’டாக்கி டாக்கிஸ்’ தாண்டி மார்க்கெட் அருகில் திராவிட கழகக்கூட்டம் ஒன்று நடந்தது. கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் ஒரு கட்டிலில் அமர்ந்தவாறு பேசிய போது பிள்ளையார் பிறந்த கதை பற்றி கீழ்கண்டவாறு சொன்னார்.


“ பரமசிவனும் பார்வதியும் ஒரு காட்டில் 

சரசமாக பேசிக்கொண்டு இருந்திருக்காங்க. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் ‘கல’  பண்ணிக்கிட்டு இருந்திருக்குதுக. இதப்பார்த்த பரமசிவன் பார்வதியிடம் 

அந்தக் காட்சியைக் காமிச்சிருக்காரு. 

ரெண்டு பேருக்கும் உடனெ நாமளும் ‘கல’  பண்ணுவோமேன்னு ஆசை வந்திருச்சி.

 அந்த யானைங்களப் பார்த்துக்கிட்டே 

‘கல’  பண்ணதால 

குழந்தை யானை முகத்தோட பிறந்திருக்கு”


கலை என்பதை அய்யா ‘கல’ என்று உச்சரித்தார்.

பெரியார் உடலுறவைப் பற்றி ‘கலை’ என்ற வார்த்தையாலேயே அன்று பேசும்போது குறிப்பிட்டார்.


 உடல் உறவு கூட கலை தானே. 

மன்மதக் கலை எல்லோருக்குமே 

தெரிந்த வார்த்தை. 

'சொல்லித்தெரிவதில்லை மன்மதக் கலை'

 என்பது பழமொழி. 


அதனால் ஐயா கலை என்று சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. 


…………………………………….


மீள் பதிவு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.