Share

Oct 13, 2021

நமது அரசு நமது நாடு

 'காதலிக்க நேரமில்லை' 

ரவிச்சந்திரன் 

'பணக்காரப் பிள்ளை'

படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

1968 ம் வருடம். 


தி. மு.க ஆட்சிக்கு வந்த மறு வருடம். 

முதல்வர் அறிஞர் அண்ணாவையும்

 தி. மு. க. ஆட்சியையும் புகழ்ந்து 

'நமது அரசு, நமது நாடு, நமது வாழ்வு என்பதெது, 

நமது தலைவன், நல்ல அறிஞன், 

ஏற்றுக் கொண்ட பதவி அது, '


' அன்னை தமிழின் அருந்தவப் பிள்ளை, 

அண்ணன் போல பிறந்தவர் இல்லை' 

டி. எம். எஸ் பாடலுக்கு பாடி 

ரவிச்சந்திரன் நடித்தவர்.


1971 பொதுத்தேர்தலில் தி. மு.க வெற்றிக்காக வெளிப்படையாக ரவிச்சந்திரன் பிரச்சாரம் செய்தார். 


'எரியீட்டி' என்ற ஒரு வித்தியாசமான

 தி. மு.க ஆதரவு பத்திரிகை

 அந்த தேர்தல் நேரத்தில் பிரபலம். 


1987ல எம். ஜி.ஆர் மறைந்த போது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அஞ்சலி செலுத்த ரவிச்சந்திரன் போயிருந்த போது ஏதோ

 சின்ன சல சலப்பு ஏற்பட்டதாக சொல்வார்கள். 


மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 

ஜெயா டிவியில் ரவிச்சந்திரன் தொடர் பேட்டி ஒன்று சில வாரங்களுக்கு ஒளிபரப்பாகியது. 


'மோட்டார் சுந்தரம் பிள்ளை ' துவங்கி குமரிப்பெண், நான், பணக்காரப் பிள்ளை, அன்று கண்ட முகம், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி போல எத்தனையோ படங்களில் ஜெயலலிதா இவருடன் ஜோடியாக நடித்தார்.


' அன்று கண்ட முகம்' பாட்டு ஒன்று. 

''வாடா மச்சான் வாடா,  பயப்படாம வாடா, 

உந்தன் ஜம்பம் என்னுடம் பலிக்குமாடா?

உங்கம்மா இருந்தா அவள கேளு பாசம் என்னான்னு "

எம். ஜி. ஆரின் மெய்க்காப்பாளராயிருந்த 

மீசை கே.பி.ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து பாடி ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.