75 வயதில் ராஜேஷ் மரணம்.
"சினிமா எனும் பூதம்" படித்து விட்டு
ராஜேஷ் பாராட்டி பேசினார்.
ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து unbiased"
நூலில் ஆங்காங்கே
R.P.ராஜநாயஹத்தின் ஆங்கில வரிகள் பிரயோகம் குறித்து சிலாகித்து பேசினார்.
ராஜேஷின் நெருக்கமான உறவினர்கள் எனக்கு அறிமுகம் உண்டு.
" என்னை சந்திக்க வேண்டும் என்று இவ்வளவு வருடங்களாக உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?" என்ற அவருடைய சீரியஸான கேள்விக்கு ராஜநாயஹம் சொல்ல பதிலில்லை.
தன் ராமாவரம் வீட்டிற்கு வரச்சொல்லி ரொம்ப வலியுறுத்தினார்.
ராஜநாயஹம் நூல்கள்'சினிமா எனும் பூதம் பாகம் 2',
'தழல் வீரம்' 'காரணச்செறிவு'
அன்பளிப்பாக அனுப்பி வைத்தேன்.
சென்ற வருடம் ராஜேஷ் பற்றி
முரசு டிவி 'சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடரில் பேசினேன்.
நிகழ்ச்சியை பார்த்தார்.
.....
ராஜேஷ் திரையுலகில்
பாக்யராஜ் அவர்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டவர்.
கன்னி பருவத்திலே படத்தின் வெற்றிக்கு பாக்யராஜின் பங்கு வசனம், வில்லன் வில்லன் என்று.
அவருடைய 'அந்த ஏழு நாட்கள்' மூலம் ராஜேஷ் நல்ல ரவுண்டு வந்தார்.
பாக்யராஜ் பலரின் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்.
அது பெரிய லிஸ்ட்.
ராஜேஷின் முன்னேற்றத்திற்கு
சொந்த அத்தை மகன் இயக்குநர் மகேந்திரன் உதவவில்லை.
'மெட்டி' ராஜேஷுக்கு நடித்ததில் பிடிக்காதது என்று கூறியது நினைவில்
நிற்கிறது.
கல்லூரியில் ஆங்கில இலக்கியம் என்னுடன் படித்த அசோக் ராஜேஷின் சித்தப்பா மகன். அப்போதே அத்தை மகன் தங்க பதக்கம் மகேந்திரன் என்பதை அடிக்கடி சொல்வதுண்டு.
ராஜேஷின் இன்னொரு சித்தப்பா மகன் ஜேமி.
ராஜேஷ் ஷூட்டிங்கில் ப்ரேக் போது சீட்டு விளையாடத் தெரியாது என்று சொன்ன போது கே.ஆர். விஜயா " நிஜமாவா? ஆச்சரியமா இருக்கே, உண்மையாவா?" என்பதை மௌனமாக, வார்த்தையாக இல்லாமல் முக பாவனைகளால் எப்படி கேட்டார் என்பதை பல முறை செய்து காட்டியதை ரசித்த அனுபவம்.
ஜேமி " எத்தனை அழகு கொட்டி கிடக்குது" கச்சேரியில் பிரமாதமாக பாடுவது
கண் கொள்ளா காட்சி.
'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது'
இதையெல்லாம் மொபைலில் பேசிய ராஜேஷிடம் சொன்னேன்.
உடனடி ஆதங்கம் " இந்த நாற்பது வருடத்தில ராஜேஷை சந்திக்கணும்னு ராஜநாயஹத்துக்கு தோணவேயில்லியா?"
ராஜேஷ் நடத்திய ரெஸ்டாரண்ட்டில் நிர்வாகியாக பணி புரிந்தார்.
ஜேமி இறந்து விட்டார். தம்பி டேவிட்டும் தான். ஜேமியின் தங்கை ஹெலன் பெங்களூரில் இருக்கிறார் என்பதையெல்லாம் ராஜேஷ் தெரிவித்தார்.
'சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடரில் ராஜேஷ் பற்றி பேச இருந்த போது சில முறை செல் பேசினேன்.
ராஜநாயஹம் புத்தகங்களுடன் சின்னதா புத்தர் மர பொம்மை இருப்பதை பார்த்து விட்டு "எனக்கு அன்பளிப்பா வர்றதெல்லாம் இப்படி புத்தரா தான் இருக்கு"
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.