பச்சை குழந்தையின் பார்வை
Sep 22, 2008
பச்சை குழந்தையின் பார்வை
- R.P. ராஜநாயஹம்
Love and Romance.
குறிப்பிட்ட
காதலியை தேடி கண்டு பிடிக்க முடிந்தது.
கால் நூற்றாண்டுக்கு பின்.
Winsome angel தனிமரமாக ...
அவளிடம் முதலில் தொலைபேசியில் பேச்சு. உடனே போய் பார்க்க வில்லை. தினமும் இரண்டு முறை தொலைபேசியில்.மூன்று மாதம் முப்பது கடிதம் ஒவ்வொன்றும் இருபதுபக்க கடிதம்.
அப்புறம் போய் பார்த்தேன்.
தேவதையின் பார்வையில் ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் பச்சை குழந்தை பார்ப்பது போலவே இருந்தது.
”நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ”
இது கல்யாண்ஜியின் கவிதை. அபிதா.
இதழ்களின் லேசான குமிழில் ‘அ’, இதழ்களின் சந்திப்பில் ’பி’, உதடுகளின் தெறிப்பில் ’தா’. லா.ச.ராவின் அபிதா.
ஹைமவதி, ஹிமவான் புத்ரி,
பர்வத ராஜகுமாரி.
கண்ணீர் வற்றி விட்டது.
..
முழு இரவுவிடியும் வரை
தனி அறையில் தனிமையில்.
நிமிடம் கூட தூங்கவில்லை. ஆனால் ......
No Physical Love.
..
'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை' -அசோகமித்திரன் சொல்வார்.
அசோகமித்திரன் புதுவை வந்திருந்தபோது இலக்கிய விவாதத்தில் சற்று வேகமாகவே சொன்னார் 'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை.'
அப்போது புரிந்து கொள்ள குழப்பமாகத்தான் தோன்றியது.
..
Winsome angel.
So long, Farewell.
இன்று மீண்டும் பிரிவு.
காலம் உள்ளவரை நினைவு கண்ணில் கசிந்து கொண்டிருக்கும்.
"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
- Byron
https://www.facebook.com/100006104256328/posts/2594420420771408/?app=fbl
https://www.facebook.com/share/r/16djWkYbgG/
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.