Share

Jun 12, 2025

ரவா இட்லி சிக்கல்

ரவா இட்லி சிக்கல் 
- R.P. ராஜநாயஹம் 

" உங்க தம்பி எப்படி இருக்காரு?"

திரைப்பட நடிகர் " நான் தான் அவனுக்கு என் வீட்ல தங்க எடம் கொடுத்திருக்கேன்."

"அவருக்கு கல்யாணமே ஆகலியா?"

" இவனுக்கு யாருங்க பொண்ணு குடுப்பா? வேல வெட்டியில்லாதவனுக்கு யாரு பொண்ணு குடுப்பாங்கெ?
தெனம் பதினாலு மணி நேரம் தூங்குறான். அஞ்சு வேளெ நல்லா சாப்பிடுறான். "

மீண்டும் அழுத்தமாக சொன்னார் "அஞ்சு வேளெ சாப்பாடு. பதினாலு மணி நேரம் தூக்கம்."

இந்த திரைப்பட நடிகரின் தம்பிக்கே வயசு இப்ப எழுபது இருக்கும். இந்த வயசுல நல்லா சாப்பிடுறதும், நெறஞ்ச தூக்கமும் எவ்வளவு பெரிய பாக்கியம். கொடுத்து வக்ற விஷயமா இது?

அந்த தம்பியும் நடிகர். அண்ணனுக்கு செல்வமும் செல்வாக்கும் கூடிய மாதிரி இவருக்கு அமையவில்லை.

அண்ணன் நடிகரின் ஜாதக நம்பிக்கை "கட்டம் சரியில்லன்னா திட்டம் எதுவும் நடக்காதே" 

My concern has been always with the 
not so successful people.

தம்பி நடிகர் பற்றிய பழைய நினைவு.
ஸ்ரீதர், பாலசந்தர் படங்களில் நடித்திருந்தும் பலன் பெரிதாய் காணமுடியாமல் போயிருக்கிறது.

அருணாசலம் ஸ்டுடியோவில் ராஜநாயஹம் சீன் ஷூட்டிங் 'ராசுக்குட்டி'க்காக நடக்கும் போது அங்கு இன்னொரு நடிகருடன் வந்திருந்தார்.
ஷாட் ப்ரேக்கில் ராஜநாயஹம் நடிப்பு பற்றி "சார், ஹ்யூமர் ப்ரமாதமா பண்றீங்க.  பெரிய விஷயம். என்னால ஒங்க மாதிரி பண்ணவே முடியாது"

செல் போனில் பேசிக்கொண்டிருந்த அண்ணன் நடிகருக்கு இரவு உணவு வந்திருக்கிறது. 
பேசும்போதே " ஒரு நிமிஷம்"

"Take your time, sir"

உணவு கொண்டு வந்த சமையல்காரம்மாவிடம் பேசுகிறார்.

"நான் ரவா இட்லி தான கேட்டேன்?"

"இட்லின்னு நெனச்சிட்டேன்யா. இது இட்லி."

" முண்ட, முண்ட.."

தொடர்ந்து ரொம்ப கோபமா கத்த ஆரம்பிச்சிட்டார்.  Abusive language.
"போடி வெளிய. "

போனில் " ரவா இட்லின்னு தெளிவா சொல்லியிருக்கேன். இப்டி பண்றான்னா எம்புட்டு திமிரு.."

காதால் கேட்க நேர்ந்த தர்ம சங்கடம்.

My concern is always with the not so brilliant people.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.