Share

Jan 2, 2010

Carnal Thoughts-28


Nihita's Love and Carnal desire!

எம்ஜியார் பெரிய திருடனாக நடிக்கும் படங்களில்,திருட்டுப் பழி,கொலைப் பழி விழுந்து போலிஸ் துரத்தினாலும், சிறையில் போட்டாலும் கதாநாயகி சரோஜா தேவி உருக்கமாக " ஒருநாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை ......என் இறைவன் திருடவில்லை " என்று பாடுவார். " உறவு சொல்ல ஒருவன் இன்றி வாழ்பவன் ...நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்" என்று நடனமாடுவார்.
சினிமாவைப் பொறுத்தவரை இது எவர் கிரீன் சுப்ஜெக்ட்.
அயோக்கியனை விரும்பும் பெண்!
அஜீத் - ஷாலினி "அமர்க்களம் ",
ஜீவா - நயன்தாரா " ஈ ".
இந்த சௌத்திரி மகன் ஜீவா அற்புதமான நடிகன். நம்பிக்கை நட்சத்திரம்!
நேபால் நாட்டில் ஒரு பெண் வக்கீல். இவர் மகள் நிஹிதா பிஸ்வாஸ். நிஹிதாவுக்கு இருபது வயது. சிறையில் ஒரு கைதி.அவனுக்கு 64 வயது.
Serial killer! The Bikini Killer! International Criminal!
அவ்வப்போது கைதிகளை சந்திக்க அனுமதி கொடுப்பார்களே.இவனை சிறையில் அப்படி சந்தித்திருக்கிறாள். என்ன சில சில இருபது நிமிடங்கள்.
சோப்ராஜ்,நிஹிதா இருவரும் சென்ற அக்டோபர் மாதம் சிறையிலே நடந்த நேபால் நாட்டு " பட தஷைன் " திரு விழாக் கொண்டாட்டத்தின் போது திருமணம் செய்துகொண்டார்கள்!இதற்கு அவளுடைய சகோதரனும், தாயும் அன்று full support. வக்கீலும்,தாயுமானவள் சகுந்தலா!
பன்னிரண்டு முதல் இருபத்திநான்கு பேரை கொன்றிருப்பான் அந்த சீரியல் கொலைகாரன் என குழப்பமாகத்தான் கணித்திருக்கிறார்கள் . பல பெண்களை நீச்சல் உடையிலே கொன்ற Bikini Killer!
1975-1976 வருடங்களில் தாய்லாந்து, நேபால், இந்தியா, மலேசியாவில் தான் அத்தனை கொலைகளையும் செய்திருக்கிறான்.இந்தியாவிலிருந்து 1997ல் விடுதலையாகி பிரான்ஸ் சென்றவன் 2003 ல் காத்மாண்டு வீதி ஒன்றில் ஒரு பத்திரிகை நிருபர் கண்டுபிடித்ததால் நேபால் சிறையில் இன்று இருப்பவன்.
தன் வாழ்க்கையை படமாக்க உரிமை வழங்கி 15 மில்லியன் டாலர் பெற்றவன் என சொல்லப்படுகிறது .

பெண்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றவனை எப்படி ஒரு இருபது வயது பெண் விரும்பி மணக்கிறாள் . Loving and marrying a killer with approval of a mother looks a bit fishy!
அந்த கொலைகாரன் சோப்ராஜ்! சார்லஸ் சோப்ராஜ்!இந்திய ஆணுக்கும், வியட்நாமிய பெண்ணுக்கும் பிறந்த சோப்ராஜ் ஒரு பிரஞ்சு குடிமகன். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டவன். இவனுடைய மனைவிமார் பிரான்சில் ஒருத்தியும் ஆஸ்த்ரேலியாவில் இன்னொருத்தியும் இருக்கிறார்கள்.
ஒரு கிரிமினல் இந்தியாவில் செய்தி ஊடகங்களால்மிகவும் பிரபலப்படுத்தப் பட்டான் என்றால் அவன் சோப்ராஜ் தான். 1986ல் மார்ச் மாதம் 16 ம்தேதி டெல்லி திகார் சிறையிலிருந்து தப்பித்த நாள் துவங்கி..........21வது நாள்
அடுத்த ஏப்ரல் மாதம் அவன் பிறந்த நாளான ஆறாம் தேதியன்று அன்று கோவாவில் ஒரு ரெஸ்டாரண்டில் இன்ஸ்பெக்டர் மதுகர் ஷிண்டே " சோப்ராஜ் " என்ற கையைப் பிடித்த போது “What Shobraj? Is this the way you treat your foreign tourist? Very unfair” என்று கூலாக கேட்டவன். சிக்கும்போது கூட பதறாமல் கேட்டவன்.அவனை கைது செய்து கொண்டு செல்லும்போது இன்ஸ்பெக்டர் ஷிண்டே யைப் பார்த்து " ரிலாக்ஸ் ஆக இருங்க. நான் ஜெயிலில் இருந்து தான தப்பிப்பவன். போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்ப மாட்டேன்!" என்று ஆறுதல் சொன்னவன் சோப்ராஜ்." நான் எதுக்கு பணத்துக்காக கொலை செய்யணும். என் புத்தகங்களின் ராயல்டியே எனக்கு போதும்."
அவன் திகார் சிறையில் இருந்து தப்பித்ததற்கு காரணம் உண்டு. பத்து வருடமாக அப்போது சிறையில் இருந்து விட்ட காலம்.விடுதலையானால் தாய்லாந்திற்கு அனுப்பபடவிருந்தான். அங்கே நிச்சயம் அவனை தூக்கில் இட்டுவிடுவார்கள் என தெரியும். அதனால் இந்தியாவில் கைதியாய் தொடர அந்த தப்பித்தல் சாகசத்தை செய்தான்.
1986ல் இந்தப் பெண் நிஹிதா நேபாளத்தில் பிறக்கவே இல்லை. தன்னை விட 44 வயது மூத்த பெரிய கொலைகாரனை மணந்து கொண்டதாக சொல்லி " அவர் நல்லவர் " என்றும் உற்சாகமாக பேசுகிறாள்.
"I don't know what he was—what he is now is important. He is a good man. ''

"I am mature enough to decide for myself. Age does not make a difference."

What is Nihita's Aim? Sex or Limelight?


Criminals are creative artistsஎன்பதற்கு சிறந்த உதாரணம் சோப்ராஜ் என்பதால் இதுவும் அவனுடைய mastermindவேலையாயிருக்குமோ என்று உலகத்தையே குழம்ப வைத்துக்கொண்டிருக்கிறான்.

1 comment:

  1. Avan serthu vaithirukkum alavukku athigamaana Panam !! Veru ethuvum kaaranam illai !!

    Nakeeran.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.