Share

Feb 14, 2016

தோள்முனைத் தொங்கல்

சீமந்த புத்ரம் என்றால் என்ன? வளைகாப்பு சீமந்தம் பெறும் குழந்தை தான் சீமந்த புத்ரன். வளைகாப்பு என்பது தலைச்சன் குழந்தைக்குத் தான் நடக்கும். அதனால் பெற்றவர்க்கு முதல் குழந்தை சீமந்த புத்ரன் அல்லது சீமந்த புத்ரி!


 நான் ஒரு சீமந்த புத்ரன்!

......................................



”மனிதன் இழுக்கும் மாமிச வண்டியில் குதிரை கிடந்து ஹை .. ஹை என்றது” - இந்த கவிதை எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியது. வைத்தீஸ்வரனின் தாயார் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தங்கை.

...........................................


”வரும் போகும்” என்று நெடுங்கவிதை எழுதிய மேதை சி.மணி ஒரு தடவை ’லிக்கர்’ என்று நினைத்து டெட்டாலை எடுத்து குடித்து விட்டார்.


”பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எழுத.” -சி.மணி கவிதை.
”என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.” இதுவும் சி.மணியின் கவிதையே தான். தலைப்பு “ தீர்வு”

.......................................

டாக்டர் ராஜா எம்.பி.பி.எஸ் எழுதிய கீழ்கண்ட கவிதையின் ஆன்ம விடுதலை, நிறைந்த அன்பு, முழுமையான வேதனைத்துயர்.


“ எண்ணெய் ப் பற்றி எரியும் தீயால்
பிடித்தவர்களையும் பிடித்தவற்றையும்
பற்றிக்கொண்டிருக்கிறேன்
தீவிரமாய்.
விடுபடும் வேட்கையில்
நெளிகிறது ஒரு நெருப்புச்சுடர்”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.