Share

Apr 6, 2026

ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கிய எம்ஜிஆர் ரசிகனான பொடியன்


ஜெய்சங்கரிடம் 'அன்புள்ள மான்விழியே' யில் இருந்த துறு துறுப்பு, Smartness ஹரநாத் ராஜாவிடம் 'அந்தால ஓ சிலக்கா'வில் கொஞ்சம் கூட இல்லை. 

தமிழ் தெலுங்கு இரண்டிலுமே
 ஜமுனா பூரணம் தான். Graceful .இயல்பான நளினம்.

பொடியனாக இருக்கும் போது ஜெய்சங்கருக்கு காலேஜ் ரோடு விலாசத்திற்கு கடிதம் எழுதியதுண்டு.
அவருடைய பதில் printed letter
 " அன்புடையீர் வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. என் கையொப்பமிட்ட புகைப்படம் இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடன்
ஜெய்சங்கர் 

புகைப்படத்தில் கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது.

திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில் 
ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கினவன் என்ற பிரபலம்.

அப்போது எம்ஜிஆர் ரசிகன்.
 ( பெரியவனாகி வாக்குரிமை வந்த பின் எம்ஜிஆரின்அதிமுகவுக்கு வாக்களித்ததேயில்லை)
திமுக என்பதால் பாதிரியார் ஆண்டனி ராஜ் கோபமாக கேட்டார்" உன் தலைவன் கடவுளே இல்லை என்று சொல்பவர். தெரியுமாடா? அந்தோ, மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்து போனால் என்ன பயன்? " 

" சின்னப்பையனா இருக்கும்போதே சினிமா நடிகருக்கு கடிதம் எழுதினாயாமே?" 
பத்தாம் வகுப்பு படிக்கையில் கேட்டார்.

https://youtu.be/f-fL8CVz-HU?si=shUe9pTS7E8iXd_P

https://youtu.be/pLsSfxOEZ1g?si=w9Fa4XiNiZIrvGsN&sfnsn=wiwspwa

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.