கூத்துப்பட்டறை நாடகம் பார்க்க 2017ல் வந்திருந்த அரவிந்தனை கடைசியாக பார்க்க வாய்த்தது.
கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியத்திடம் சுருக்கமாக
" ராஜநாயஹம் ரைட்டர்" என்றார்.
சென்னைக்கு 2015ல் வந்த தமிழ் இந்து பத்திரிகையில் ராஜநாயஹத்தின் சிலகட்டுரைகள் வெளியிட்டார். மேட்டிமைத்தன்மையுடன் அவர் பேச்சு.
பிரபலமான ஏப்பி நாகராஜன் ஆர்ட்டிக்கள் ஆரம்ப வரி " ஸ்த்ரீபார்ட் வேடம் போட்டவர்" பற்றி 'கட்டுரையோட ஃபார்ம் இல்லை' என்றார். சினிமா எனும் பூதத்தில் மிக பிரபலமானது.
கட்டுரை என்ற வடிவத்தை உடைத்த ராஜநாயஹம் எழுத்து..
சினிமா எனும் பூதம் எம்ஜிராமச்சந்திரன் இந்துவில் நிராகரித்து மட்டமான ஏதோ ஒன்றை பதிப்பித்தார்.
சுந்தர ராமசாமியின் பிரசாதம் தொகுப்பை சாதாரணமாக குறிப்பிட்டு அதற்கு பிறகு தான் பல்லக்கு தூக்கிகள் தொகுப்பிலிருந்து அவர் கதைகள் சிறப்பானதென்ற அர்த்தத்தில் எழுதியவர் அரவிந்தன் எனும் போது என்ன சொல்ல?
சுந்தர ராமசாமி 'பிரசாதம்' படித்து
பிரமித்து தான் நவீன தமிழ் இலக்கிய வாசகன் ஆனவன் ராஜநாயஹம் என்பதை நீங்கள் எழுத வேண்டும் என்று சுந்தர் ராமசாமி கேட்டுக் கொண்டதால் சௌந்தரசுகன் பத்திரிகையில் 2005ல் 'பிரசாதம் செய்த மாயம்' எழுதினேன்.
2004ல் திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்த காலச்சுவடு கனிமொழி கவிதை நிகழ்ச்சியில் காலச்சுவடு இதழ்கள் பற்றி ராஜநாயஹம் பேசிய போது அரவிந்தன் பதில் கொடுத்தார்.
அது தான் முதல் சந்திப்பு.
ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை பற்றி சிலாகித்து சொன்னார்.
பின்னர் நடந்த விஷயம் சம்பந்தமாக அரவிந்தன் 'நாஞ்சில் நாடனிடம் calibre இல்லைன்னு தெரியிது'
பன்முகத்தில் 2005ல் ராஜநாயஹம் மீதான பின் அரசியல் தொட்டு 'விலங்கும் நாணி கண் புதைக்கும் ' எழுதிய போது அரவிந்தன்
" உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது."
அன்பளிப்பாக அவருக்கு டீ சர்ட் அனுப்பிய போது நெகிழ்ந்தார்.
ஜெயமோகனிடம் நெருக்கமாக இருந்து பகையானவர்.
உரையாடல்களில் ஜெயமோகன் பேசும் போது " ஜெய் என்ன சொல்றார்னா" என்று ஆரம்பித்து டப்பிங் பேசியவர் அரவிந்தன்.
ஜெயமோகனிடம் தெறிக்கும் sadism பற்றி அவரிடமே அரவிந்தன் கேட்ட போது பதில்
" அது என் அப்பாவிடம் இருந்து வந்த விஷயம்"
பிரமிள் சமாதியில் பூக்களை அபிஷேகம் செய்தவர் இன்னொருவர். அதை அவர் சொல்வதை கேட்டு விட்டு
எஸ்ரா தானே கூடைப்பூக்கள் தூவியதாக எழுதியது அப்பட்டமான பொய் என்று அரவிந்தன் செல் பேச்சில் சொன்னார்.
"It is a vile thing to die,
When men are unprepared and look not for it."
- Shakespeare
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.