லக்ஷ்மி நாராயணா ஹோட்டல். வெஜிடேரியன். முட்டை மட்டுமே.
கோவை சிங்காநல்லூர் ரோடு வரதராஜபுரத்தில்.
பிரபலமான சின்ன உணவகம். புரோட்டா சாப்பிட்ட போது உரிமையாளர் கண்ணனின் நெருங்கிய உறவினர் இயக்குநர் R. சுந்தர்ராஜன் என்பதை சொன்னார்.
கண்ணனின் அப்பா பெயர் R. சுந்தர்ராஜ்.
பூர்வீக வீட்டின் முன்பகுதியில் தான் கடை.
இந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இயக்குநர் சுந்தர்ராஜன் இருந்திருக்கிறார்.
ஹோட்டல் பற்றி சுவாரஸ்யமான செய்தி எளனி கடைக்காரர் சொன்னார்.
அந்த பழைய காலத்தில் மொதலாளி கல்லா பக்கத்திலேயே எண்ணெய், முட்டைகள் வைத்திருப்பார். சமையல்காரர் தேவையானதை அவ்வப்போது தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.