2015ல் சே.ராமானுஜம் மறைந்த போது திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் இரங்கல் கூட்டத்திற்கு
ந.முத்துசாமி, நடேஷுடன் சென்றிருந்த போது அருகில் நடிகர் சத்யேந்திரா அமர்ந்திருந்தார். சிநேக பாவத்துடன் சிரிக்கும் சத்யேந்திரா. அங்கிருந்து கிளம்பிய போது அவரும் எங்களுடன். சாலி கிராமம் பகுதியில் இறங்கிக் கொண்டார்.
அருணாச்சலம் ரோட்டில் பார்த்த போது எதிர்ப்புறம் இருந்து ரோட்டை க்ராஸ் செய்து வந்து சொன்னார்.
" என்னிடம் French tuition படிக்க மாணவர்கள் தேவை. யாராவது இருந்தால் சொல்லுங்கள் ராஜநாயஹம் சார்"
சத்யேந்திராவின் சிரித்த முக தீர்க்கமான பார்வை நெஞ்சை பிசையும். பாவப்பட்ட ஜீவன் என்பதற்கு மிக பொருத்தமான மனிதர்.
எங்கே எந்த கூட்டத்திலும் சத்யேந்திரா பிரசன்னம்.
ஃபேஸ்புக் ஸ்டோரியில் வித்தியாசமான முக பாவனைகள் காட்டியதை மறக்க முடியாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.