சென்ற வருடம் செப்டம்பர் 13ந்தேதி.
திருப்பூரிலிருந்து நானும் என் மனைவியும் கோவை எக்ஸ்பிரஸில் வந்து பெரம்பூரில் இறங்கி எதிரே அடையாறு ஆனந்தபவன் வந்த போது -அங்கே திறந்த லிஃப்ட் -அதிலிருந்து வெளிப்பட்டார் S.P.முத்துராமன்!
சென்னையில் முதல் தரிசனம்!
இருபது வருடங்களுக்கு முன் அவரை சந்தித்து ஒரு இரண்டு மணி நேரம் உரையாடியிருக்கிறேன்.
அதற்கும் முன் திரையுலகில் நானும் குப்பை கொட்டிக்கொண்டிருந்த போது எஸ்.பி.எம் மிக பிஸியாக! அன்று இரண்டு வருடங்களில் எடிட்டிங், ஷூட்டிங் செட் என்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எப்போதும் நான் பார்த்திருக்கிற பிரபல இயக்குனர்.
பிழைப்பு தேடி சென்னை வந்திருக்கிற நான் யார் என்பதை அறிந்தவுடன் சொல்கிறார். “ சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்காதே.. உனக்கு சினிமா வேண்டாம். இப்ப சினிஃபீல்ட் முன்ன இருந்த மாதிரி கூட இல்ல.. சினிமா ஆசைய மறந்துட்ட இல்ல? சினிமா வேண்டாம்..”
இருபது வருடங்களுக்கு முன் என்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்த போது கூட இதையே தான் அவர் சொன்னார்.
இப்போது பெரம்பூர் அடையாறு பவனில் என் மனைவியைப்பார்த்து சொன்னார்.” இவன நல்லா பிடிச்சிக்க. சினிமா பக்கம் போக விட்டுடாதே. இறுக்கி பிடிச்சிக்க இவன! விட்டுடாதே.கைய இறுக்கிப்பிடிச்சுக்க.”
.....................................................................
http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.