Share

May 17, 2016

'அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்’


இரண்டு கோடி பேருக்கு மேல் இளைஞர்கள் இந்த மாநில வாக்காளர்களாக உள்ளார்கள். அதாவது 18 வயது முதல் 40 வயதிற்குள்.
அப்படியானால் கூட இரட்டை இலைக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்க நேரும் எனில் தமிழகம் ஒரு விசித்திர மண் தான்.
ஆளுங்கட்சி பணபலத்தால் வென்றது என்று பணத்தை இறைத்த திமுகவும் சொல்லும்.
மக்கள் நலக்கூட்டணி கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி வைத்தாற்போல கோரஸாக ’அதிமுகவும் திமுகவும் பணத்தை கொட்டினார்கள்’ என்பதையே தோல்விக்கு சாக்காக சொல்லப்போகிறார்கள். ஏதோ தங்களுக்கு இருக்கும் பெரும் மக்கள் செல்வாக்கு பணத்தால் கலைக்கப்பட்டு விட்டதாக புலம்பித்தீர்ப்பார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி பெரிய அய்யா, சின்ன அய்யா இருவருமே பண நாயக வெற்றியையே சாக்காக சொல்லிக்கொள்வார்கள்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் போல திமுகவிற்கு எத்தனை சீட்கள் கிடைக்கிறதோ அவை அத்தனையுமே தங்கள் கட்சி செல்வாக்கால் தான் என்று இறும்பூதெய்தி விடுவர் என்று சொல்லவும் வேண்டுமோ?
அதிமுக, திமுக இரு கட்சியையுமே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு அனுமதிப்பது மாபெரும் தவறு,பெரிய முட்டாள்தனம். அந்த வகையில் தான் எதிர்கட்சிகள் ஓரணியில் இந்த முறை திமுகவின் பின் திரண்டு அதிமுகவை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்காததால் அதிமுக தொடர்ந்து இரண்டாம் முறை ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்து விட்டார்கள்.
Miracles never cease in this world! அப்படி ஆட்சி மாற்றம் திமுக மூலம் ஒரு வேளை அதிசயமாக நடக்க நேர்ந்தால் தமிழக மக்கள் புத்திசாலிகள் என்று சொல்லலாம். இரண்டு கோடி இளைய வாக்காளர்களுக்கு க்ரெடிட் கொடுக்கலாம். ஆனால் ‘அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்’ வகைக்கு சம்பந்தப்பட்டதாயிற்றே!


R.K.Laxman's Cartoon


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

http://rprajanayahem.blogspot.in/2016/05/2016.html

http://rprajanayahem.blogspot.in/…/rknarayans-misguided-nov…

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-17.html

2 comments:

  1. யார் யாரோ கருத்துகணிப்புகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் சொன்னது தான் நடந்தது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.