Share

Oct 7, 2019

Acid Wit - பொன்னையன் ஜோக்கு அர்த பழசு

பொன்னையன் "காத்த தான் தூக்கி ஜெயில்ல வக்கனும்" ஜோக்கு அர்த பழசு.

 45 வருஷத்துக்கு முன்னால 'தங்கப்பதக்கம்' படத்திலேயே சோ அடிச்ச ஜோக்கு தான்.

சோ அரசியல்வாதி. பக்கோடா காதரும், காரைக்கால் பக்கிரி சாமியும் ஆளுக்கொரு கையை பிடித்து இதமாக அமுக்கிக்கொண்டிருக்கும் போது சுருளிராஜன் வருகிறார்.

சோ: நீங்க தான் போஸ்டரெல்லாம் அடிச்சி என்னய ஜெயிக்க வச்சீங்க. ஒக்காருங்க

சுருளி : அது என்னங்க.. குவார்ட்டர் சைசு. நான் ஃபுல்லே அடிப்பங்க.

சோ: என்ன விசயம்?

சுருளி : ஒரு பிரச்ன. எனக்கொரு தம்பி..
சோ: தம்பிங்கன்னாலே பிரச்ன தான்.

சுருளி : என் தம்பி தங்கமான தம்பி. பஸ் மறியல் போராட்டத்துல கலந்துக்கிட்டு காலயில அரஸ்டாகி ரொம்ப கஷ்டப்பட்டு சாயந்திரந்தான் ரிலீஸ் ஆனான்.

சோ:சுதந்ர போராட்டத்தில கூட இப்படி தியாகிங்கள பாத்ருக்க முடியாது.

சுருளி: அப்டிப்பட்ட தம்பிய தூக்கி ஜெயில்ல போட்டுட்டாங்கங்க.
நம்ம தம்பிக்கும் எதிர்கட்சிக்காரருக்கும் சின்ன தகராறு. நம்ம தம்பி தண்ணில இருந்துருக்காரு.

சோ: என்ன மில்லியா?

சுருளி : இங்லீஷ் தண்ணி. நம்ம தம்பி கத்தியால வயித்தெ கிழிச்சிட்டாரு. கொடல் வெளிய வந்துடுச்சி. இதப்போயி பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு தம்பிய தூக்கி ஜெயில்ல வச்சிருக்காங்க.

சோ: நியாயமா கொடலல்ல தூக்கி ஜெயில்ல வச்சிருக்கனும்.

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.