Share

Oct 11, 2019

தூண்டுதலின் பேரில் எழுதியதல்ல

2016ல் குமுதம் கிசு கிசு ஸ்பெஷலில் நான் எஸ்.வரலக்ஷ்மி பற்றி எழுதிய விஷயங்களுக்காக ஏ.எல்.சீனிவாசன்  மகன் மறைந்த ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் மனைவி கோபப்பட்டு குமுதம் ஆஃபிஸிற்கு போன் பேசினார் என்று எனக்கு தகவல் சொல்லப்பட்டது.

கண்ணதாசன் குடும்பத்தினர் தான்  என்னை இப்படி தூண்டி விட்டு நான் எழுதியிருப்பதாக உறுதியான நிச்சயமாக சொன்னாராம்.

அப்படி எதுவும் கிடையாது. கண்ணதாசன் குடும்பத்தில் எனக்கு யாரையும் தெரியவே தெரியாது.

பாவம், அவர்கள் தான் என்னை தூண்டி விட்டு நான் எழுதி விட்டதாக கண்ணப்பன் மனைவி தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்.

சொந்தங்களில் ஏற்படும் பகை செத்தாலும் மறையாது. தலைமுறை தாண்டியும் இப்படி தொடர்ந்திருக்கிறது.

ஒரு இலக்கியவாதியின் பார்வையில் நான் இதை எழுதியிருந்தேன்.

இதில் கண்ணப்பன் மனைவி கோபப்பட எதுவும் இல்லை.

சொல்லப்போனால் ஏ.எல்.எஸ்ஸின் அபிமான தாரம் எஸ்.வரலக்ஷ்மி தன் நடவடிக்கைகளில் வெளிப்படையாக இருந்திருக்கிறார்.
டி.ஆர். மகாலிங்கம் உறவு விஷயத்திலும், ஏ.எல்.சீனிவாசனுடனான தாம்பத்யத்திலும்,
 அந்தந்த காலங்களில் அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இருந்திருக்கவில்லை. ஊரறிய வாழ்ந்த வாழ்க்கை.

Prestige is revered by the lords and scorned by the wise.

கூத்துப்பட்டறைக்கு தன் மகன் பாரத் அட்மிஷன் விஷயமாக வந்த கண்ணதாசனின் மகன் ஸ்ரீனிவாசனிடம் இது பற்றி சொன்னேன். அவர் வருத்தமும் வேதனையும் அடைந்தார்.
பாருங்கள். கண்ணதாசன் தன் அண்ணன் பெயரைத் தான்  தன்னுடைய  மகனுக்கு வைத்திருக்கிறார்.


http://rprajanayahem.blogspot.com/…/kumudam-kisu-kisu-speci…



,,,..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.