Share

Oct 13, 2019

டைப்பிஸ்ட் கோபு



'நெஞ்சே நீ வாழ்க'
ஒரு நாடகம்.
பிலஹரி எழுதியது.
டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.
அதில் ஒரு டைபிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு.
நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.
 முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.
அதனால் டைபிஸ்ட் என்பது அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.


பின் இக்கதையே 'ஆலயம்' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.

நாகேஷின் முக்கிய நண்பர். கிறிஸ்தவ பெண் ரெஜினாவை அவர் திருமணம் செய்து கொண்ட விஷயம் கோபுவிற்கு பிடிக்கவில்லை. நட்பு கெட்டுப் போய் விட்டது.

இவருடைய நகைச்சுவை நாடகங்கள் அந்த காலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன் பாப்புலர்.

சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார்.

இவருடைய கண்கள், அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது.

 சோ வின் நண்பர் நடிகர் நீலுவும் டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலு வை பார்த்தால் டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள். டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள்.

'ராசுக்குட்டி ' பட டிஸ்கசன் போது இவருடைய பெயரை ஒரு ரோல் செய்ய கதை இலாக்காவில் இருந்த ஒருவர் சிபாரிசு செய்த போது பாக்யராஜ்
 " டைப்பிஸ்ட் கோபு வேண்டாம். மறு நாளே கஷ்டத்தை சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று ஆபிஸ் வந்து நிற்பார்.  தொந்தரவு. " என சலித்துஉடனே நிராகரித்து விட்டார்.

ருத்ரா படத்தில் டைபிஸ்ட் கோபு BANK MANAGER ரோல் செய்யும் போது என்ன கஷ்டமோ.. பாவம்... இப்படி பணம் கேட்டு பாக்யராஜை தொந்தரவு செய்திருக்கிறார்.
இந்த மாதிரி நடிகர்கள் தொந்தரவானவர்கள் என கெட்ட பேராகி எல்லா பட கம்பனிகளும் ஒதுக்கி விடுவார்கள் .

டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர்.
இதை விகடனில் பதினைந்து வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார்.

என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம். 1975ல் அவ்வளவு வசதி, வீடு,நகைகள் எல்லாம் போய் விட்டதாம்.

அனைத்தையும் இழந்து ஒரு சின்ன வாடகை வீட்டில் குடியேறி, நடிக்க கிடைத்த சின்ன,சின்ன வாய்ப்புகள் கூட இல்லாமல் ஆகி வீட்டின் முன்னே விளையாடிகொண்டிருக்கும் குழந்தைகளுக்கு காகிதகப்பல் செய்து கொடுத்துக்கொண்டு அந்த சின்ன வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து இருந்திருக்கிறார்.

The ups and downs of life have made it so difficult to understand.

இந்த 2019ம் வருடம் மார்ச் மாதம் தான் இறந்தார்.

...................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.