Share

Aug 4, 2021

கிஷோர்

 இன்று கிஷோர் குமார் பிறந்த தினம் 


Kishore Kumar (4 August 1929 – 13 October 1987)


"I have three best friends in this world. What's surprising is that they also happen to be your  three best friends. They are Bachpan (childhood), Jawani (Youth) and Budhapa (old age)." - Kishore Kumar


ராஜேஷ் கன்னாவின் உயர்வில் கிஷோர் குமார் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு.


“Roop Tera Mastana  Pyar Mera diwana “


“Kora Kaagaz Tha  Yeh Mann Mera “


“zindegi ek safar “


“Yeh shaam Mastaanee “


“Ye Kyaa huaa,Kaise huaa ,Kab huaa Kyo huaa”


ஒன்பது வருட திலீப்குமாருடனான (living legend) affair ஐ ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.

Madhubala - The beauty with tragedy and The Venus of Indian Cinema!


அசோக் குமாரின் தம்பி கிஷோருக்கு இது இரண்டாவது திருமணம். 1969ல் முற்றிய இதய நோய், நுரையீரல் பிரச்னைகள் காரணமாக  மதுபாலாவின் அகால மரணம் நடந்த அதே வருடம் Pyar ka mousam, Aradhana, அடுத்த வருடம் Sharmilee ஆகிய படங்களில் கிஷோர் குமார் பின்னணி பாடகராக மாபெரும் சாதனை செய்தார். அதன் பிறகு he never looked back.


கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலி தான் பின்னர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியானார்.

கிஷோரின் நான்காவது மனைவி லீனா சந்தாவர்க்கருக்கு அது இரண்டாவது திருமணம்.


ஆஷா போன்ஸ்லேயுடன் தான் தன் கடைசி பாடலை கிஷோர் குமார் சாவதற்கு முந்தைய தினம் (12-10-1987) பாடினார். மறு நாள் செத்துப்போனார். மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ரீதேவி இருவருக்காக ‘Waqt ki Aawaz’ல் ’Guru O Guru…Guru Guru aajao’ என்ற பாடல் அது.


ஒரு விஷயம். இந்த மிதுன் சக்ரவர்த்தி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலியை தன் மனைவியாக்கி குழந்தைகள் பெற்றுக்கொண்டவர். ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் என்று அவர் மீது பலத்த வதந்தி இணைந்து நடித்த போது இருந்ததுண்டு.


கிஷோர் ஒரு multi faceted personality. நடிகர், பாடகர், பின்னணி பாடகர் என்று அவருடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.


மேடைக் கச்சேரியில் எல்லா பிரபல பின்னணி பாடகர் களுக்கும் பாடல் வரிகள் கண் முன்னால் ஒரு நோட் புக்கில் இருக்க வேண்டும். அதைப் பார்த்துக் கொண்டே தான் பாட முடியும். ஆனால் கிஷோர் குமாருக்கு அந்த தேவையில்லை. எந்த பாடல் என்றாலும் வார்த்தைகள் மனதிலேயே இருக்கும். எந்த பாடலுக்கும் அவர் வரிகளை நோட் புக்கில் பார்க்காமலே பிரமாதமாக பாடுவார்.


Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!

இந்த வார்த்தைகளை 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரைப் பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.


இந்தியத்திரை  பின்னணி பாடகர்களில்

 முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது.


பள்ளி, கல்லூரி நாட்களில் கிஷோர் குமார், பி.பி.எஸ் பாடல்களை உற்சாகமாக பாடியிருக்கிறேன்.


அதன் பிறகும், இப்போதும் தான்.


https://m.facebook.com/story.php?story_fbid=3116347261912052&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.