Share

Aug 12, 2021

பிரமிள் பதிவில் பின்னூட்டங்கள்

 

ஜெயந்தன் மகன் 2012 ல் ராஜநாயஹம் ப்ளாக்கில் பிரமிளை தாக்கி எழுதிய கமெண்ட் : என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது என்றறியும் போது கோபம் வருகிறது. தன்னை தானே நெறிப்படுத்திக்கொள்ள முடியாதவன்   எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும் !

கோடு - ஜெயந்தன் : இது என் தந்தை அவமானப் படுத்தப் பட்ட தின் பதிவு.  இதை நான் வெறுக்கிறேன். இப்பதிவு மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது.  பிரமிள், ஜெயந்தன் இருவருக்கும் பெருமை சேர்ப்பது அல்ல இப்பதிவு.  பாசுந்தி, தோசை வாங்கிக் கொடுத்த தன் புரவல பெருமையை பீற்றிக் கொள்ளவே முயல்கிறார் R. P.

ஜெயந்தன் மகன் கோபத்திற்கான பதில் பின்னூட்டங்கள் கீழே 

கால சுப்ரமணியம் : மூன்று நாள் பட்டினியோடு வருகிறார். பெயருக்கு அவர் மிக முதன்மை தருபவர். ஜெயந்தனை படித்தோ அறிந்தோ இருக்கமாட்டார். ஜெயகாந்தன் பெயரைக் குறுக்கி ஜெயந்தன் ஆக்கி வைத்துக்கொண்டது என்று உடனே தீர்மானித்துக்கொண்டு கட்டாயம் முகச்சுளிப்பைக் காட்டியிருப்பார். பெயரை, தோற்றத்தை வைத்தும் முதல் ஓரிரு பேச்சுக்களை வைத்தும் ஒருவரை எடை போடுவதில் அவர் மிகத் துல்லியம் கொண்டவர். தேவதேவன் வீட்டில் வண்ணதாசன் வந்து சந்தித்த போதும் இதுவே நடந்தது. மணிக்கணக்கில் அப்படி ஒரு பிரகிருதி அருகிலிருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லையாம். அந்த நிகழ்வை பிரமிள் என்னிடம் பின்பு விவரித்திருக்கிறார். அந்த நிகழ்வை வண்ணதாசன் பின்பு ஒரு முறை என்னிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். கண்ணதாசனைப் போல பெயர் என்பதுக்கும் மேல் அவர் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட விதம் சரியில்லை என்று பிரமிள் கூறியிருக்கிறார்.

ராமசாமி துரைப்பாண்டி :  நினைவலைகளைப் பகிரும் போது யாவும் வரும்தானே.. இங்கே எங்கு உங்கள் தந்தையைச் சிறுமைப் படுத்தியுள்ளார். பெருமைதானே செய்திருக்கிறார்.. ஏன் இவ்வளவு கோபம் வருகிறது இந்தப் பதிவின் நோக்கம் பாசந்தி அல்ல... இரு ஆளுமைகளின் சந்திப்பின் மையம் குறித்த பதிவு மட்டுமே... பொது வெளி ஆளுமை பொதுவானாவர்... உங்களுக்கு மட்டுமே அப்பா இல்லை... குருதி உறவு சொல்லி அவரைச் சுருக்க வேண்டாமே அன்பே. 

Gopalakrishnan Sundararaman : Don't be naive and stupid. People can't write the facts as per your whims and fancies. If there is factual error on the incident, it can only be corrected. Atleast you should be happy that your father is figuring in a widely read forum. R. P. Rajanayahem posts are generally based on the actual incidents and his opinions and comments are honest and upright. We know more about your father and as a child of a known literary person, you wouldn't be knowing much about your Dad. This posting in no way, demean your Dad.  

சரவணன் மாணிக்கவாசகம் :தமிழ் எழுத்தாளர்கள் எப்போதும் துதி பாடுபவர்களைப் பார்த்தே பழகிவிட்டார்கள். அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதாகத் தெரிகிறது. தோழர் ராஜநாயஹம் தான் வாங்கிக் கொடுத்ததை எழுதினால் அதைப் பற்றி மட்டும் தான் அவர் வருடக்கணக்காகப் பதிவுகள் எழுத வேண்டும். உங்களுக்கு ராஜநாயஹத்தைத் தெரியாது. ஜெயந்தனை எந்த விதத்திலும் மரியாதைக்குறைவாக இந்தப்பதிவு சொல்வதாகத் தெரியவில்லை. எண்பதுகளிலேயே நாங்கள் ஜெயந்தனை முழுதும் படித்து விவாதித்தாகியாயிற்று. இது சொல்வது இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமன்றி வேறு யாரேனும் இரண்டு எதிர் குணாதிசயங்கள் கொண்ட நண்பர்கள் வந்தாலும் Hostக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைக் குறிக்கிறது. பிரமிளையோ ஜான் ஆபிரகாமையோ சந்திரபாபுவையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது. 

சரவணகுமார் அய்யாவு : இதில், பிரமிள் அவர்களையோ, ஜெயந்தன் அவர்களையோ சிறுமைப்படுத்தும் எந்த வாக்கியமும் இல்லை. ராஜநாயஹம் சாரின் நோக்கமும் அது அல்ல. பிரமிள் மீது உள்ள பிரியத்தின் காரணமாகத் தான் அவர் மாற்றிய பெயரை இன்றளவும் வைத்திருக்கிறார். ஜெயந்தன் பற்றிய ராஜநாயஹம் சாரின் உயர்வான பதிவு.

https://m.facebook.com/story.php?story_fbid=3101078233438955&id=100006104256328

பா. அசோக்  : ஜெயந்தன் உங்க தந்தை என்பதாலேயே நீங்கள் அவரை முழுமையாக அறிந்தவர் என நினைக்க வேண்டாம்.எந்த இடம் உங்கள் தந்தையை சிறுமை படுத்துகிறது.  தாங்கள் அனைவரும் உண்டதை பகிர்ந்துள்ளார்,  பதிவர். இதில்  குற்றம் சொல்லுமளவு என்ன தவறு உள்ளது...?


Vasudevan Kathamuthu : இதில் எங்கே ஜெயந்தன் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளார்.  ராஜநாயஹம் சார்  ஒரு வெள்ளந்தியான மனிதர். எதையும் மறைத்தோ புனைந்தோ எழுதத் தெரியாதவர். அது வரமா? சாபமா? என்றுகூட நான் நினைப்பதுண்டு.

ரவி லோசனன் :  Where arises the question of demeaning  your father. Your fault finding is baseless and childish . 





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.