Share

Aug 1, 2021

இரண்டு கிழவிகள் எழுதிய புத்தகங்கள்



வானதி பதிப்பகம் 1996 ல் வெளியிட்ட நூல் 

எம். எஸ் சௌந்தரம் எழுதிய 

"சங்கீத நினைவு அலைகள் "

இவர் அப்போது எண்பது வயது மாமி. 

பத்மா சுப்பிரமணியத்தின் 

 மன்னியின் தாயார். 


இந்த நூல் ரொம்ப சின்னது.

 மேலோட்டமாக கர்நாடக சங்கீத நூல் என்ற எண்ணத்தை படிப்பவருக்கு ஏற்படுத்தும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் 

 பிராமண பெண் வாழ்க்கை போராட்டங்களை பற்றிய நூல்.


 சௌந்தரம் அவர்களின் கணவன் மட்டுமல்ல,                 அவரது குரு கூட அவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை சுருக்கமாக விளக்கிய அற்புதமான நூல். 


அவரது குருநாதர் அரியக்குடி. 

அதோடு அந்தக்கால கர்நாடக சங்கீத உலகம், அன்றைய ஜாம்பவான்கள், சிஷ்யர்கள் பற்றியும் அருமையான Reference book. 

ஆனால் ரொம்ப சின்ன புத்தகம். 

பக்கங்கள் ரொம்ப குறைவு .


அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது. எழுத்தாளர் பொன்னீலனின் தாயார். 


இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம். பக்கங்கள் ரொம்ப அதிகம். 


1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை 

இந்த நூலை வெளியிட்டது.

 சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி                             நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி 

அருமையான சித்திரம். 

நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது.


இரண்டு முதிய பெண்மணிகள் 

இருவரும்  

இறந்து விட்டார்கள். 


'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட, விளக்குவதற்கு 

இங்கே ஆட்கள் உண்டு. 


2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் 

நான் அழகிய நாயகி அம்மாளின்

 'கவலை ' புத்தகம் பற்றி பேசினேன். 


அப்போது எம் எஸ் சௌந்தரம்

 ' சங்கீத நினைவு அலைகள் ' 

நூலை ஒப்பிட்டு பேசினேன்.


....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.