Share

Aug 10, 2021

கோ. மகேசன் - கவிஞர்

 கோ. மகேசன். கவிஞர். 


 1987, 88, 89 ஆண்டு ஏப்ரல் வரை பழனியில் டாக்டர் கோபாலன் தெருவில் 

நான் வசித்தேன். 

தெருவில் பெரிய வீட்டுக்காரர் என்று, ரீஃபைன்ட் ரைஸ் ப்ரான் ஆயில் வியாபாரம் செய்து கொண்டிருந்த என்னை தவிட்டெண்ணைக்காரர் என்றும் அடையாளமிடுவார்கள். 


அப்போது மகேசன் பெற்றோர் 

எதிர் காம்பவுண்ட்டில். 

மகேசன் அப்போது ரொம்ப சிறுவன். அப்பா இண்டியன் பேங்கில் அட்டெண்டராக இருந்தார். 

எப்போதும் என்னைப் பார்த்தால் வணக்கம் சொல்வார். 

மகேசனின் அம்மா என் மனைவியுடன் நல்ல நட்பு. 

தங்கமானவர் அந்த அம்மாள். 

பழனியில் இருந்து நாங்கள் பாண்டிச்சேரி கிளம்பும் போது மகேசனின் தாயார் எங்கள் குடும்ப புகைப்படம் ஞாபகார்த்தமாக கேட்டு வாங்கிக்கொண்டார். அப்போது கீர்த்தி குழந்தை. 


2015 ல் திருப்பூரில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த போது மகேசன் ஃபேஸ்புக்கில் என்னைப் பார்த்து விட்டு அடையாளம் கண்டு 'சார்,  நீங்கள் பழனியில் இருந்திருக்கிறீர்களா'  என்று விசாரித்து தெரிந்து கொண்டவர் தன் தாயாரை அழைத்துக் கொண்டு எங்களை பார்க்க வந்த போது சற்று ஆச்சரியம். 26 வருடங்கள் கழித்து அவருடைய தாயாரை நாங்கள் சந்தித்தோம். 


கணவரை இழந்து விட்ட அந்த அம்மாளுக்கு இண்டியன் பேங்கிலேயே உடன் வேலை கிடைத்திருந்திருக்கிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். 


சிறுவன் மகேசன் இப்போது நல்ல கவிஞர். இலக்கிய வாசகர். கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். 

அப்பல்லோ மெடிக்கல்ஸில் பணியாற்றுகிறார். 

அம்மா உடல்நிலை காரணமாக வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 


மகேசனின் 'பரிணாம தேவதைகள் ' தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'மேய்ச்சல்'  என்ற தலைப்பில் பிரபலமான ஒரு கவிதை 


" கிராமத்தில் 

படிக்காததால் 

ஆடு மாடுகளை மேய்க்கிறார்கள். 

நகரத்தில் 

படித்ததால் 

நாய்களை மேய்க்கிறார்கள் "


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.