Share

Aug 10, 2021

'மணல் கோடுகளாய்' நூலை முன்வைத்து பா. அசோக்

 'மணல் கோடுகளாய்' நூலை முன்வைத்து 

அன்பு இளவல் வழக்கறிஞர் பா.அசோக்

(தமிழ் நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அசோசியேஷன் கோ-சேர்மன்) 

 எழுதியுள்ள 

ஈர வரிகள் :


யார்யாரையோ படித்து வியந்து நிற்கையில், அதெல்லாம் தூசுகள்,  

வைரக்கல் இங்கே இருக்கிறது பார் என வியக்க வைத்தவர்கள் ராஜநாயஹம் சாரும் முத்து நாகு அண்ணனும். இருவரும் வேறு வகை எழுத்தையாள்பவர்கள்.


 R. P. ராஜநாயஹம் 

என் ஞானாசிரியன், 

 ஞான தகப்பன். 


இவரையோ இவர் நூலையோ எழுத தகுதியற்றவன் நான். நமக்குள் பகிரவே இது.


எத்தனையோ நாட்களுக்கு முன் எழுத வேண்டியது...


வேண்டுமென்றே தள்ளிப்போட்டு வந்தேன்..


இதை படித்தால் ஏற்படப்போகும் பெருஞ்சுமைக்கு அஞ்சியே தவிர்த்தது...


தன் மகன் கீர்த்தியை எல்கேஜி வகுப்பில் விட்டதையும், மிக இளவயதில் வேலைக்கு சேர்த்து விட்ட நாளையும் ஒப்பிட்டு எழுதியதை முகநூலில் படித்த போது நெஞ்சிலறைந்த கலக்கம், பலநாள் இருந்தது. மீண்டும் அந்த அத்யாயத்தை படிக்க வேண்டுமோ என்ற அச்சத்தாலேயே இத்தனை தாமதம். 


The past beats inside me like a second heart...- The sea.


செய்துங்கநல்லூரில் செல்வ சீமானாய் பிறந்து, திருச்சி, மதுரையிலும், திருவில்லிபுத்தூரிலும், பாண்டியிலும், அப்படியே வளர்ந்து,

இலக்கியவாதிகளுக்கும், இசைகலைஞர்களுக்கும் பெரும் போஷகனாய், வள்ளலாய் வாழ்ந்து, தன் இயல்பை மீறாது உண்மையாகவும்,நல்லவனாகவும் இருப்பதால், ஏற்படும் வாழ்விடர்களை பகிரும் பதிவுகளே இது. 


Faceless name or a nameless face என தன்னை மு.க. அழகிரியிடம் அறிமுகமாவதாகட்டும்,  தன் ஸ்போக்கன் இங்கிலீஷ் மாணவர்களாகட்டும், அனைவருக்குமே well known face ஆக தான் வருகிறார். 


பிரமிள் மீதான அன்பின் விளைவே ராஜநாய"ஹ"ம்.  ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழில் நாயகம் என அச்சடித்த போது, மறுத்து, "ஹ " வை சேர்க்க சொன்னார்.


ஏனெனில் அந்த பெயரை சொன்னது பிரமிள். பிரமிளின் மீது அவருடைய மரியாதை அபரிமிதமானது. 


சாரு, லியர் அரசன் என  வியந்து எழுதியது இவரைத்தான்.  உண்மையில் இவருடைய நினைவாற்றல் ,பாரிய வரம்.  எந்த குறிப்பும்,முன்தயாரிப்பும் இல்லாமல் மணி கணக்கில் ஒரு subject ஐ யாரிப்போது பேச முடியும். இசை, இலக்கியம், ஓவியம், சினிமா, நாடகம் என எதை பேச ஆரம்பித்தாலும், ராஜநாயஹ அறிவுக்கடலின் பேரலைகள் நம்மை மூழ்கடிக்கும். 


பிரபல பத்திரிகையாளர்களென அறியப்படுகிற சிலர்,  இவரது எழுத்துக்களை பயன்படுத்திவிட்டு  நன்றி கூட சொல்லாத , அடுத்தவர் பிள்ளைக்கு தன் முன்னெழுத்தை போடும் பிரபல ஈனங்களை  மன்னித்தே போய்விடுகிறார்.  


இந்நூல்களின் உருவாக்கத்தில் அவர் பட்ட சிரமங்களை அறிவேன், அவர் சந்தித்த துரோகங்களையும் அறிவேன்... 

அத்தனையும் தாங்கும் சக்தி அந்த இளகிய மனதிற்கெப்படி ..?


பட்டை தீட்டிய வைரம் எத்தனை நாள் தூசி படிந்து கிடந்தாலும் ஒரு சிறு துடைப்பும் மெல்லிய வெளிச்சமும்  வைரத்தை இனங்காட்டிவிடும். 


நலம் கெட புழுதியில் விழ எந்த நல்வீணை ஒப்பும். 


இந்த ராஜநாயஹ வீணை இசைக்க வேண்டிய அறிவு ராகங்கள் இன்னும் பல உள்ளன, காலம் அவ்வீணையை இசைக்க செய்யும்... 

சேர்ந்தே ரசிப்போம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.