Share

Jul 31, 2021

இன்ஸ்பெக்டர் சாந்தா

 இன்ஸ்பெக்டர் சாந்தா


அந்தக் காலத்தில் பெண் போலீஸ் கிடையாது.


ஆனால் க்ரூப் டான்ஸ் நடிகை சாந்தாவுடைய அப்பா 

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவராம். 

அதனால் பேசும்போது அடையாளப் படுத்த இன்ஸ்பெக்டர் சாந்தா என்றே 

திரைப்பட நடன உலகில் குறிப்பிடப்பட்டார்.


1964ல் நாகேஷ் கதாநாயகனாக நடித்த ’சர்வர் சுந்தரம்’ படத்தில் மாமல்லபுரம் லொகேஷனில்

  ‘ சிலையெடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு‘ பாடலில் கே.ஆர்.விஜயாவுடன் 

க்ரூப் டான்ஸ் ஆடியவர்களில் ஒருவர் சாந்தா.


அதே சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ்  ஆடிப்பாடும் “ அவளுக்கென்ன அழகிய முகம்” பாட்டில் “ அன்புக் காதலன் வந்தான்” என்று அவருடன் ஆடும் பெண் தான் சாந்தா.

 

ஸ்ரீ தரின் கலைக்கோயிலில் 

'வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ்.


அடுத்த வருடமே ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் வில்லியாக சாந்தா நடித்தார்.


 "பழமுதிர் சோலையிலே தோழி 

பார்த்தவன் வந்தானடி “ என்ற செமி க்ளாசிக்கல் பீம்ப்ளாஸ் ராகப் பாடலுக்கு நடனமாடுவார்.


 தொடர்ந்து

“ ஆஹா, இது நள்ளிரவு” பாடல். 


தமிழ் திரை கண்ட ஒரு நல்ல vamp என சாந்தாவைச் சொல்லவேண்டும்.


"கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி

கல்யாணம் ஆகும் முன்னே

கற்பனையில் நீந்துதடி" என்று 

'கொடி மலர்' படத்தில் 

காஞ்சனாவுடன் சாந்தா ஆடுவார்.


'நீ' படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ், L.R. ஈஸ்வரி பாடிய

"One day, One way, one girl, one boy" பாடலில் நாகேஷுடன் ஆடினார்.


'அரச கட்டளை ' சுசிலா பாடல்

"என்னைப் பாடவைத்தவன் ஒருவன்

என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்" ஜெயலலிதாவுடன் ஆடுபவர்

 இன்ஸ்பெக்டர் சாந்தா தான். 


டான்ஸர் சாந்தாவுக்கு

 ரசிகர்கள் நிறைய இருந்தார்கள். 


நடன இயக்குனர் தாராவுக்கு அந்தக் காலத்தில் சாந்தா சிறந்த தோழி.


தாரா யார் தெரிகிறதா? 

பிரபு தேவாவுக்கு பெரியம்மா.


ஆமாம். பிரபு தேவாவின் அம்மாவை

 சுந்தரம் மாஸ்டர் திருமணம் செய்யுமுன்னரே

 தாரா மாஸ்டருடன் சட்டியில விழுந்து பொட்டியில விழுந்து கட்டில்லயும் விழுந்து  குடும்பம் நடத்தி ஒரு பிள்ளைய பெத்து....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.