என் எழுத்து பற்றி ஆத்மார்த்தி சினிமா எனும் பூதம் நூலை முன்வைத்து எழுதிய விமர்சனத்திற்கு மேலோரின் பின்னூட்டங்கள்
அசோக் பா :ஆத்மார்த்தி சொல்வது போல, சினிமா, தமிழர் வாழ்வில் ஒரு பகுதி என்றால், தவறேயில்லை. அதிலும் குறிப்பாக மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான், சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம், சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார். அத்தனை பிடிப்பு சினிமா மேல், இந்த மதுரைகாரர்களுக்கு... ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும், அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை. ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை. எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும், சாதரணமாக, நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். நொடிக்கொரு செய்தி, ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி, அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்... தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..
ஓவியமா.. இதை பார்,
அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது, அந்த குழந்தையை பேணியவர்,... ஊரே வியக்கும் சாருவுக்கு... சாரு இவரை கண்டு வியப்பார்...
கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்...
எவ்வளவோ உண்டு சொல்ல...
காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... ஆனால் அந்த வைரங்கள் காலத்தை வென்று நிற்கும்... அப்படி ஒரு வைரம் தான் என் ஞானதகப்பன்,
R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்
பேராசிரியர் காசி. மாரியப்பன் : நண்பர் R.P.ராஜநாயஹம் நாங்களும் திருச்சியும் தவறவிட்ட பொக்கிஷம்.
வறுத்து உடனே அரைத்துத் தயாரித்த காப்பியை அவர் வாங்கித்தர அருந்தியது மனதில் அலையாடுகிறது. அந்தக்காப்பியின் புதுமைக்கும் அடர்த்திக்கும் சுவைக்கும் மேலானது ராஜநாயஹத்தின் எழுத்து.
அவர் ஒரு நாவல் எழுதவேண்டும். நடப்பு எழுத்தாளர்கள் சந்திக்காத அனுபவத்தையும் வாழ்க்கையையும் அந்நாவல் சொல்லும். எத்தனை துன்பங்கள் எவ்வளவு இன்பங்கள் ஒரு மனிதருக்கு. அவருடன் திருச்சியில் பழகக் கிடைத்த தருணங்களைப் பயன்படுத்த வில்லையோ என்ற மனக்குறை உண்டு. சினிமாவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. யாரை நோவது?
Raja Hassan : R.p. Rajanayahem அவர்களை ப்ளாக்ஸ்பாட் காலத்திலிருந்தே பின் தொடர்ந்து வருகிறேன். கட்டுரை முடிந்துவிட்டதே, என்று எண்ண வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
அவரது அபாரமான நினைவாற்றல், அந்தந்த காலகட்டத்தில் நடந்த பிற விஷயங்கள் என ஒரு பூமாலை போல் தொகுத்து வழங்கிய செய்திகள் ஏராளம்..
நாம் வியந்து கண்ணுற்ற எத்தனை எத்தனை ஆளுமைகள் அவர்தம் பின்னணிகள்..
நாம் அறியாதவற்றை மாய வித்தைக்காரன் போல் காட்டும் மாயாஜால எழுத்து...
அந்நிகழ்வுக்கு பொருத்தமான ஆங்கிலப் பொன்மொழிகள் , Idioms,& Quotes... ஆஹா எத்தனை சுவையான அனுபவங்களை இந்த 'சினிமா எனும் பூதம்' நூலில் அற்புதமாக எழுதியுள்ளார்.
ஆத்மார்த்தி அவர்களின் இந்த ஆழ்ந்த விமர்சனம் ராஜநாயஹம் அவர்களின் எழுத்துக்கு என்றும் கட்டியம் கூறும்.!!
சரவணன் மாணிக்கவாசகம் :மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சிறப்பான விமர்சனத்திற்கு. எழுத்தில் வந்தது குறைவு இவரிடம் இருப்பது ஏராளம்.
Geethappriyan Karthikeyan Vasudevan : கவிஞர் ஆத்மார்த்தியின் சினிமா எனும் பூதம் புத்தக விமர்சனம் உண்மையானது,சினிமா எனும் பூதம் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத புத்தகம், இப்புத்தகம் வாங்குபவர்கள் இரண்டு பிரதி வாங்குவது நன்று, ஒன்று யாராவது படிக்கிறேன் என வாங்கிப்போனாலும் ஒன்று நாம் படிக்க தங்கும், இப்புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் திரும்பத் தரமாட்டார்கள் என்பது கண்கூடு, காரணம் ஒவ்வொரு திரை ஆளுமையைப் பற்றிய ஆசிரியரின் தனித்துவமான பார்வை மற்றும் சொற்சிக்கனமான நடையில் எழுதிய ஆழ்ந்த தீர்க்கமான வரிகளைக் கொண்ட கட்டுரைகள் அவை, அதற்குள் எத்தனை எத்தனை cross reference, எதுவும் திணித்தலின்றி இயல்பாக பட்டறிவால் எழுதப்பட்டவை, சென்னையின் அண்ணா நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களில் சினிமா எனும் பூதம் படிக்க ஆவண செய்ய வேண்டும்,இனி சினிமா பற்றி புத்தகம் எழுதுபவர்கள் தம் சினிமா பற்றிய புத்தகத்தை மீள் பிரசுரம் செய்ய விழைபவர்கள் இந்த புத்தகத்தை படித்து விட்டு புத்தகம் வெளியிட வேண்டுமா? அது இத்தனை தரமாக வருமா? என நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் சிறிதும் கிடையாது, ஆட்டுப் புழுக்கை போல ஆண்டுக்கு ஆண்டு சித்திரை மாதம் புத்தகங்கள் வெளி வருகின்றன,அதில் இத்தனை தரமாக தனித்துவமாக புத்தகம் வருவது துர்லபம்.
Saravana Kumar Ayyavu : Bruce Lee's famous quote' Be like water, Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot, it becomes the teapot. Now, water can flow or it can crash. Be water, my friend.'
Your writing also like water, Sir. The flow, the force. You never takes notes for writing. You go with the flow. You just alow it to come through you, you never make hindrance to the flow, you never take stand, for or against, you write what is it, you write what exactly needed. That is your uniqueness. That's where you differ from other writer, Sir.
சிவகுமார் கணேசன் : 'பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது.'
அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள்
இந்த நூலில் இருக்கின்றன.
முழுவதுமாக உடன்படுகிறேன் சார்.வாசிக்கையில் என்னை வியக்கச் செய்த விஷயம் நாமறியாத,நாம் கவனத்தில் கொள்ளாத திரை மனிதர்களையெல்லாம் மிகக் கவனமாக நேர்த்தியாக அவர் பதிவு செய்திருப்பதுதான்.
Usha Sankarasubramanian : எங்கள் எல்லோருடைய சாரபிலும் திரு.ஆத்மார்த்தி அவர்களின் பதிவு மிகவும் அருமை. எந்த ஒரு மிகைபடுத்தலுமஂ இல்லாத உண்மையான பதிவு. நான் எப்போதுமஂ உங்கள் ஞாபகசக்தியும் பன்முகத்திறமையும் கண்டு வியந்திருக்கிறேன்
Hats off to you sir.
Krishnan Venkatachalam : சொல்ல வேண்டியதையெல்லாம் ஆத்மார்த்தி சொல்லிவிட்டார்.இதுக்கு மேல என்ன சொல்ல? ஆனால் ராஜநாயஹம் இதுவரை சொன்னதை விடவும் சொல்லாத விஷயங்கள் அவரிடம் ஏராளமாக உள்ளன. அவைகள் அனைத்தும் வரவேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
Antony Arul Prakash : அன்போடு ஆத்மார்த்தி அவர்கள் மிகவும் பண்போடு எழுதியுள்ள இந்த பதிவு அற்புதம். RPR சாருக்கு இது ஒரு நன்றி காணிக்கை🙏🏼❤️
கோ.மகேசன் மகேஷ் : ஆம். ஆத்மார்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே. புத்தகத்தில் இடம்பெறும் நபர்கள் மட்டுமே நமக்குத் தெரியும், அதனை ஒட்டிய நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு தெரியாத புதியவை. அப்படி அறிந்து கொள்ள முனைபவர்களுக்கு R.P. ராஜநாயஹம் சார் தான் நூலகம்.
Arun Swaminathan : 2013ல் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்தை முதன்முதலில் படிக்க நேர்ந்தது. அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு முறையும் அவருடன் உரையாடும் போது, சினிமா குறித்த அரிய தகவல்களை கொட்டி தீர்ப்பார். அவரது ஞாபக திறன் பிரம்மிப்பானது. தேதி வாரியாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்வார். இதையெல்லாம் தொகுத்து இவர் ஏன் எழுதாமல் இருக்கிறார் என பலமுறை யோசித்ததுண்டு. ஆனால் கேட்டதில்லை. ‘சினிமா எனும் பூதம்’ வெறும் டிரெய்லர் மட்டுமே, ராஜநாயஹம் விரைவில் முழு படத்தையும் வெளியிட விரும்புகிறேன்.
அ. வெற்றிவேல் : ஆத்மார்த்தமா மனதில் இருந்து எழுதி இருக்கார் ஆத்மார்த்தி.
Desikan Bhoovarahan : ஆத்மார்த்திக்கு நன்றி. R.P. Rajanayahem அவர்களின் புத்தகங்கள் நிறைய வாசகர்களை சென்று அடையவேண்டும்..
Kumar Courtallam : மிக மிக அருமையான எழுத்துநடை உயர்திரு RP ராஜநாயஹம் ஐயாவோடது.எத்தனை முறை படித்தாலும் பிரமிப்பு குறைவதில்லை
Kaveri Ganesh : So proud. அருமையான பதிவு.
Ayyanar Anandh : அருமை
Srivathsan : படித்து விட்டேன் சார். ரொம்பவே அழகாக அருமையாக விமர்சித்துள்ளார். புத்தகம் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த போதிலும் அவ்வப்போது நீங்கள் அதுபற்றி எழுதுவதை படிக்கவும் தவறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக படிக்கும் சுவாரஸ்யம் தான். அதுவே எனக்கு ஆச்சரியம் தான். அத்தகைய எழுத்து நடை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதையே ஆத்மார்த்தி சார் தன் வரிகளில் அழகுற விரிவாக விமர்சித்துள்ளார். அனைவரின் மனதின் எதிரொலி தான் அது. நன்றிகள் ஆத்மார்த்தி சார் ❣️❣️
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.