நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று பதினெட்டு வருடங்களுக்கு முன்.
திருச்சியில்.
என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL) என்னைக்காட்டி
சந்தான கோபாலன் சொன்னார்.
”இவர் என்னமா கச்சேரியை ரசித்தார் தெரியுமா!இந்த மாதிரி சதஸ் இருந்தால் தான் கீர்த்தனைகளும் நன்றாக பாட முடியும்”
என் பெயர் என்ன என்று கேட்டார்.
நான் “ராஜநாயஹம்” என்றேன்.
என் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள நான்கைந்து முறை ’ராஜநாயஹம்’ என்று கண்மூடி சொல்லிப்பார்த்தவர் சட்டென்று
’ வசதி இருக்கிறதா? (சாப்பாடு,உணவு,உறைவிடம்) பொருளாதாரம் எப்படி? அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.அது இருந்தால் தான் சங்கீத ரசனையெல்லாம்’ என்றார்.
அவர் சொன்னது அசரிரி.
அடுத்த வருடமே நான் பஞ்சம் பிழைக்க
திருப்பூர் வரும்படியானது.
'விரலில் போனால் குரல் போகும்' என்று
சங்கீத உலகில் சொல்வார்கள்.
If you concentrate on beats,melody will be lost.
ராகங்களில் முதல் ராகம் மோகனம்.
நன்னு பாலிம்ப்ப நடசி வச்சிதிவோ நா ப்ராண நாத
என்னைக் காப்பாற்ற வேண்டி நடந்தே வந்தாயா?
தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராடும் கடலுடுத்த’ மோகனம்.
’மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே’
’பழகத்தெரிய வேணும்’
’துள்ளாத மனமும் துள்ளும்’
‘மலர்கள் நனைந்தன பனியாலே’
’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’
’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’
’வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’
இந்தப்பாடல்கள் எல்லாமே மோகனராகம் தான்.
சாருகேசி ராகம்
சாருகேசி என்றால் அழகிய கூந்தல்
என்று அர்த்தம்.
இந்த ராகத்தில் தியாகபிரும்மத்தின் 'ஆடமோடி கலடே' என்ற கீர்த்தனை.
சாருகேசி ராகத்தில் தியாகப்ரும்மம்
இந்த ஒரே ஒரு கீர்த்தனை தான் இயற்றியிருக்கிறார்.
Tell me why this bad mood now
dear Rama, Please speak
I held your feet with devotion
and called you my friend
and my shelter, so speak.
இந்த ராகம் திரையில்
மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒன்று.
எம்.கே.டி பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ சாருகேசி தான்.
சௌந்தர்ராஜன் பாடிய ‘வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’சாருகேசி.
மதுரை வீரனில் எம்.எல்.வசந்தகுமாரி பாடி பத்மினி ஆடிய ‘ஆடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ’
குங்குமம் படத்தில் சிவாஜி -சாரதாவுக்கு ஒரு பாட்டு.' தூங்காத கண்ணொன்று ஒன்று’
ஸ்ரீதரின் ‘தேனிலவு’ படத்தில்ஏ.எம்.ராஜா இசையில் ஜிக்கி பாடிய ’ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக்கண்டேன்.அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன்’ இதே சாருகேசி.
காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று
ஒரு பாடல் இதே ராகம்.
ரஜினியின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவில் இந்த ராகத்தில் ஒரு மெட்டில் ஒரு பாட்டு.
‘ஆடல் கலையே தேவன் தந்தது’
சின்ன மாப்ளே படத்தில் சுகன்யா -பிரபு
'கிளு கிளு' பாட்டு
‘காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி’ சாருகேசி ராகம்.
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.