Share

Jul 23, 2021

தங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்

 எம். கே. தியாகராஜ பாகவதர் பற்றி எப்போதும் எல்லோரும் பேசும் விஷயம் "அவர் தங்கத்தட்டுல சாப்பிட்டவர்" 

இப்போது அவருடைய தம்பி எம். கே. சண்முகத்தின் மனைவி ஒரு பேட்டியில் 'அப்படியெல்லாம் கிடையாது' என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு இப்போது

 95 வயதாம். 

இவர் தியாகராஜ பாகவதரை குறிப்பிடும் போது 

சொல்லும் வார்த்தை ரசிக்கும்படியானது. 

"எங்க மூத்தார்"

குடும்ப உறவில் புழக்கமான வார்த்தை. 

கணவரின் மூத்த சகோதரர் என்பதை 'மூத்தார்' என்று சொல்வது அழகு. 


தங்கத்தட்டுல பாகவதர் சாப்பிட்டார் என்ற பொதுவான நம்பிக்கை பற்றி 'அப்படியெல்லாம் இல்ல' என்று மறுக்கிறார். 


தியாகராஜ பாகவதர் வீட்டில் ஒரு தடவை சாப்பிட வாய்த்ததைப் பற்றி கவிஞர் சுரதா 

தங்கத்தட்டுல தானுமே சாப்பிட்டதாக சொல்வார்.  

பாகவதர் இவருக்குமே தங்கத்தட்டு வைக்கச் சொல்லி அதில் சாப்பிட வைத்ததாக

 சுப்புரத்தின தாசன் பெருமைப் பட்டிருக்கிறார். 


.. 


ஏ. வி. எம் சரவணன் திரையுலக அனுபவங்கள் பற்றி சுவாரசியமாக, இயல்பாக பேசியிருக்கிறார். 

பாவமன்னிப்பு படத்தின் development hell பற்றி, அப்துல்லா என்ற பெயரில் சந்திரபாபுவை வைத்து கொஞ்சம் ஷூட்டிங் கூட நடந்த பிறகு, கேன்சல் செய்து விட்டு சிவாஜி கணேசன் நடிக்க பாவ மன்னிப்பு படம் தயாராகியிருக்கிறது. 


அதில் அவர் சொல்லும் ஒரு தகவல் - 

 'பாவ மன்னிப்பு ஷூட் செய்து கொண்டிருந்த வேளையில் சிவாஜிக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த கண்ணாம்பா இறந்து விட்டார். அப்புறம்  தான் அம்மாவாக

 எம். வி. ராஜம்மா நடித்தார்' என்கிறார்.


ஏ. வி. எம் சரவணன் ஞாபக குழப்பத்தில் பிழையான தகவல். 


கண்ணாம்பா 1964ல் தான் இறந்தார். 

பாவமன்னிப்பு 1961லேயே வெளி வந்த 

வெற்றி படம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.