வாசுதேவன் காத்தமுத்து
"எத்தனையோ எழுத்துக்களை படிக்கிறோம். எத்தனையோ எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்கிறோம்.
எழுத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
ராஜநாயஹம் சாரை முதலில் பார்த்தது ஒரு கலந்துரையாடலில்தான். அவர் மீது முதலில் கோபமும் பொறாமையும்தான் கொண்டேன். எல்லோர் கவனமும் அவர்மீதே விழும்படியான சரளமான பேச்சு; முன் தயாரிப்புகள் ஏதுமின்றி.
பிறகு அவர் எழுதிய கட்டுரை ஒன்று அச்சேறும் முன்பு படிக்கக் கிடைத்தது.
இரண்டிற்கும் இருந்த போதுவான தொரு ஒற்றுமை. பாசாங்குத்தன மற்று இருந்ததுதான்.
பேச்சு எழுத்து வாழ்க்கை எதிலும் பாசாங்குகளற்று வாழ்வது பெரும்பேறா? சாபமா?
நம் கண்முன்னே வெறும் நிழலாக வந்து போகும் இந்தப் பெரும் பிம்பங்கள் உண்மையில் எப்படித்தான் இருக்கின்றன?
கம்பன் எப்படி இருந்திருப்பான்?
அலெக்ஸாண்டார் எப்படி இறந்தான்?
ஹிட்லரின் காதல் கதை என்ன?
இது போன்ற சுவாரஸ்யங்களை விரும்பாத மனிதர்கள் யாரேனும் இருக்க முடியுமா?
அப்படித்தான்.
அனைவரையும் கட்டிப்போட்டுவிடும் சினிமா என்ற இந்தக் கலையை சாத்தியமாக்கும் பிம்பங்களுக்கென்று இருக்கும் வாழ்க்கை சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்ரமாக இருக்குமா?
இதற்கான விடைகளை சுவாரஸ்யமாக பாசாங்குத்தனங்களற்று எழுத்தில் வடிக்கும் கலையை வேறுயாரும் இவ்வளவு சிறப்பாக செய்துள்ளனரா?
அதற்கான விடைதான் கவிஞர் ஆத்மார்த்தியின் இந்த விமர்சனம்.
கற்றாரை கற்றாரே காமுறுவர்"
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.