இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம் என்ற தலைப்பில் நான் 2008 நவம்பர் 10ம் தேதி
நான் எழுதியிருந்த பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூலை 10ல் இங்கே வெளியிட்டிருந்தேன்.
அவருக்கு 91 வயது முடிந்து விட்டது.
காது பெரும்பாலும் கேட்காது.
நான் எழுதிய சம்பவம் 1990 ல் நடந்தது.
இது சத்தியம்.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டெல்லியில் பேராசிரியராக வேலை பார்த்து அவர் பணி ஓய்வு பெற்ற பின்னால் புதுவை பல்கலைக் கழக
துணை வேந்தர் வேங்கட சுப்ரமணியன் மூலம் கிடைத்த வாய்ப்பு.
1990ல் நடந்த சம்பவத்தைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்த பலருக்கும் தெரிந்த விஷயம்.
Memory is my fate.
நான் இதை எழுதி விட்டேன். அவருக்கு மகுடம் சூட்டிய பதிவு.
படித்து விட்டு கவிஞர் வைத்தீஸ்வரன் அவரிடம் சொல்லியிருக்கிறார். இ. பா என்ன புரிந்து கொண்டாரோ?
Mis communication.
அவர் டெல்லியில் பணி ஓய்வு பெற்ற 1987 அல்லது 1988 சமயத்தில் நடந்த சம்பவம் இல்லை இது.
ஆனால் அவர் பணி ஓய்வு பெற்ற சமயம் வேங்கட சுப்ரமணியன் புதுவை பல்கலைக் கழகத்தில் Director of culture பதவி தருவதாக சொல்லியிருக்கிறார்.
இ. பா. அதை மறுத்து Visiting Professor வேலை தான் வேண்டும் என்று சொல்லி விட்டு டெல்லி போய் விட்டாராம்.
வேங்கட சுப்ரமணியன் ஒத்துக்கொண்டு அவர் கேட்டுக் கொண்ட படி நாடகத்துறையில் வேலை தந்து விட்டார்.
அப்போது தான் கே. பாலச்சந்தர், வைஜயந்தி மாலா சம்பவம் என்று நான் எழுதியிருப்பதாக
இ. பா தவறாக புரிந்து கொண்டு அது உண்மையில்லை என்று வைத்தீஸ்வரனிடம் சொல்லியிருக்கிறார்.
நான் எழுதியுள்ள விஷயம் 1990 ல் நடந்த விஷயம்.
இதில் இன்னொரு விஷயம்.
கி. ரா என்னிடம் சொன்ன தகவல் பற்றி நான் இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்ட போது அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் : "பிறகென்ன? என்னை பாலச்சந்தரும் வைஜயந்தி மாலாவுமா இன்டர்வியூ செய்வது?"
இது சத்தியம்.
இந்த சம்பவமே இந்திரா பார்த்தசாரதிக்கு மறந்து விட்டது என்றால் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அவருடைய தள்ளாமை. முதுமை.
முதுமை பற்றி அவர் அன்று எழுதி பின் சேது மாதவன் இயக்கத்தில் வெளி வந்த நடிகர் சிவகுமார் நடித்த முதுமைத்துயரம் பற்றிய
'மறு பக்கம்' படம் தான் மறக்க முடியுமா?
(1994ல் 74 வயது ஜெமினி கணேசனிடம் 'வாழ வைத்த தெய்வம் படத்தில் உங்களுக்கு அப்பா ரோல் செய்தவர் எஸ். வி. சுப்பையா' என்று நான் சொன்ன போது அவர் தலையை உலுக்கி 'எனக்கு ஞாபகம் இல்லை' என்றார்.)
பாலச்சந்தர், வைஜயந்தி மாலா சம்பவம்
ஒரு வேளை நினைவில் இருந்தும் இ. பா. மறைக்கிறார், மறுக்கிறார் என்றால்
அதில் என்ன அரசியல் இருக்கிறதோ?
துணை வேந்தர் பித்தப்பூ நாவல் வேண்டும் என்று இ.பா. விடம் கேட்ட போது ' ராஜநாயஹத்திடம் கேளுங்கள். கையில வெண்ணெய வச்சிக்கிட்டு ஏன் நெய்க்கு அலையிறீங்க ' என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அவருடைய மாஸ்டர் பீஸ் நாவல் 'ஏசுவின் தோழர்கள்' நூலுக்கு(ஆஹா, என்ன ஒரு அற்புதமான நாவல்) 'திடீரென ஒரு டிரஸ்ட் பரிசு கொடுப்பதாக இருபதாயிரம் செக் அனுப்பி வைத்தது பற்றி என்னிடம் மகிழ்ச்சியாக சொன்னவர்.
இ.பா சாகித்ய அகாதெமிக்கு தி. ஜானகிராமன் பற்றி எழுதுவதற்கு நான் தான் தி. ஜா.வின் அவ்வளவு நூல்களும் கொடுத்து உதவியவன் ராஜநாயஹம் தான்.
திருப்பிக் கொடுக்கும் போது இந்திரா மாமி
மரப்பசு மட்டும் தொலைந்து விட்டது என்று சொன்ன போது ' அது பரவாயில்லை. என்னால் அதை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.' என்றேன்.
1992ல் மாமியின் மறைவுக்குப் பின் சென்னையில் லாசரா - கிருத்திகா பாராட்டு கூட்டத்தில் இ. பா அப்போது மீண்டும் சினிமாவில் நான் ராசுக்குட்டியில் கமிட் ஆகியிருப்பதை அறிந்து சொன்னார் :
"சினிமா உங்கள விட மாட்டேங்குது "
சரஸ்வதி சம்மான் விருது அவருக்கு கிடைத்த போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில்
' ராமானுஜர் ' நாடகம் பற்றி பேருரை நிகழ்த்தினேன்.
'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை ' படித்து விட்டு அவர் எனக்கு எழுதிய வார்த்தை
"You are too honest to get along with those people, who succeed in life "
இ.பா. வின் ' கிருஷ்ணா, கிருஷ்ணா ' நாவல் பற்றி
' பன்முகம் ' பத்திரிகையில் நான் எழுதிய
' லீலார்த்தம் 'கட்டுரை பிரபலமானது.
2005 ல் அவர் அறியாமல், அல்லது அறிந்தே தான் செய்த ஒரு Insult.
அதன் பிறகும் தான் 2008ல் வலைத்தளத்தில் இ.பா . பற்றி எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்.
எவ்வளவு தூக்கிப் பிடித்திருக்கிறேன்.
Memory is my fate
' இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் ' என்பதாக கண்ணதாசன் வரி.
..
https://m.facebook.com/story.php?story_fbid=3098021183744660&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=3098022313744547&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=3098021730411272&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.