அம்ரிதா ஷெர்-கில் தன் கணவனை ஓவியமாக வரைந்தாள். அந்த ஓவியம் இப்போது ஆன்லைன் விற்பனையில் அதிக விலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
10.86 கோடி விலை.
Modern Indian Art online sale.
அந்த ஓவியத்தில் அம்ரிதாவின் ஹங்கேரிய கணவன் விக்டர் இகன் ஆர்மி
டாக்டர் யூனிஃபார்மில் இருக்கிறதை பார்க்க முடிகிறது.
2015ல் அம்ரிதாவின் செல்ஃப் போர்ட்ரயிட் ஓவியம் அமெரிக்கா நியூயார்க்கில் 18.2 கோடிக்கு விற்பனையானது.
அவள் இறந்து 80 வருடமாகிறது.
செத்தும் தன் ஓவியங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இவளை 1913ல்பெற்ற தாய் ஹங்கேரிய யூதப்பெண். பெறுவதற்கு ஒத்துழைத்த அப்பா பஞ்சாப் சீக்கியர்.
ஃபிரான்ஸில் ஓவியம் பயின்ற போது தங்க மெடல் வாங்கியப்பெண்.
தன் இருபத்தொரு வயதில் இந்தியா தான் தன் தேசம் என்ற உணர்வு மேலோங்கி இந்தியா வந்தவள்.பெற்றோர் அப்போது சிம்லாவில்.
லாகூர் வந்தால் ஃபேலட்டிஸ் ஓட்டலில் தங்கி தன் காதல் காளைகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இரண்டு மணி நேர இடைவெளி விட்டு ஒரு நாளில் அஞ்சாறு பேரை எதிர்கொண்ட பெண்.
தன்னையே ஓவியங்களாக வரைந்து கொண்டவள்.
குஷ்வந்த் சிங் இவளைப்பற்றி : Pandit Nehru was supposed to have succumbed to her charms.
நிம்ஃபோ மானியாக் என்று அறியப்பட்டவள்.
குளிர்காலத்தில சிம்லாவில ஒருத்தன் டின்னருக்கு கூப்பிடறான். அம்ரிதா போனா அங்க அப்படியே
படு சூப்பரா 'ரூப்பு தேரா மஸ்தானா பியாரு மேரா தீவானா' இன்ஃப்ராஸ்ட்ரக்சர். ஆனா அவன் வெஸ்டர்ன் கிளாசிக் ரிக்கார்டை போட்டு விட்டுட்டு பேசறான்,பேசறான்...இலக்கியம்..இசைன்னு பேசிக்கிட்டே இருக்கிறான்!...வள,வளன்னு விளக்கெண்ணெய எடுத்து குண்டி கழுவன மாதிரி....ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி சல..சலன்னு.... ச்சே..அசமஞ்சம்...பேச்ச நிறுத்துடா டேய்!
இன்னொரு நாள் டின்னருக்கு கூப்பிட்டான்.. இவ போனவுடனே –
உடனே,உடனே டிரஸ்சை கலட்டிட்டு அம்மணமா கார்ப்பெட்ல படுத்திட்டா!
பிரபலஎழுத்தாளர் மால்கம் மக்கரிட்ஜ் வாலிபனாய் இருக்கும்போது அவனை ஒரே வாரத்தில் சக்கையாய் பிழிந்து குப்பையில் எறிந்த பெருமையும் அம்ரிதாவுக்கு உண்டு.
வனத்தில மேஞ்ச்சாலும் இனத்தில அடையனும் என்று நினைத்தாளோ என்னமோ தன் தாய் வழியில் சொந்தக்கார டாக்டர் விக்டர் இகன் என்பவனைத்திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.
டாக்டர் விக்டர் லாகூரில் ப்ராக்டிஸ் செய்ய ஆசைப்பட்டதால் லாகூரும் அப்போது இந்தியாவில் தானே என்று சிம்லாவிலிருந்து லாகூர் வந்தவள்.
லாகூரில் வக்கீலாக சும்மா ஈயோட்டிக்கொண்டிருந்த குஷ்வந்த் சிங் வீட்டிற்கு வந்து விசாரித்திருக்கிறாள்.“நான் இங்க புதுசா குடி வந்திருக்கேன். இங்க டெய்லர் யாரு, கார்பெண்டர் எங்க இருக்கான்,ப்ளம்பர் வேலைக்கெல்லாம் ஆள் கிடைப்பானா?”
குஷ்வந்த் சிங்கிற்கு ஏற்கனவே இந்தப்பெண் பற்றிய சகலமும் தெரியும்.
பின் சில வாரத்தில் சிம்லா அருகில் உள்ள மசோப்ராவில் குழந்தையாய் இருந்த ராகுல் சிங்கைப்பார்த்து முகம் சுளித்தாள் “What an ugly little boy!” . இதனால் கோபப்பட்டு குஷ்வந்த் மனைவி “ இந்த பொட்ட நாய என் வீட்டுக்குள்ள இனிமே விடவே மாட்டேன்”
பதிலுக்கு அம்ரிதா : “இவ புருஷன் குஷ்வந்த என் கூட படுக்க வைக்காம விடமாட்டேன்.”
குஷ்வந்த் ஆசையோடு எதிர்பார்த்திருந்தார்.
ஒரு நாள் அம்ரிதாவின் அப்பா வழி சொந்தக்கார சிங் ஒருவன் குஷ்வந்த் வீட்டிற்கு வந்து :‘ அம்ரிதாவிற்கு ஒடம்பு சரியில்ல. இன்னிக்கு இங்க தங்கிக்கறேன்”
மறு நாள் அம்ரிதா செத்துப்போய் விட்டாள்.
அவளுக்கு கொள்ளி போட்ட அவள் புருஷன் வீட்டிற்கு வந்தவுடன் போலீஸ் அவனை கைது செய்தது. ஹங்கேரி அப்போது ஹிட்லருக்கு சப்போர்ட் என்பதால் பிரிட்டிசார் இங்கே ஹங்கேரியன் டாக்டர் விக்டரை கைது செய்து விட்டது. டாக்டர் விக்டர் ஜெயிலுக்கு போனது ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் இவன் தான் என் மகள் சாவுக்கு காரணம் என்று மாமியார் குற்றம் சாட்டினாள்.
ஆனால் அவள் மரணம் கொலையல்ல. அவளை ட்ரீட் செய்ய மற்றொரு டாக்டரும் வீட்டிற்கு போயிருக்கிறார். டாக்டர் விக்டர் இந்த டாக்டரிடம் உடனெ என் பெஞ்சாதிக்கு என் ரத்த த்தை தரேன் – பிடிவாதம் செய்த போது அந்த டாக்டர் ‘ இருப்பா! ப்ளட் க்ரூப் பாக்க வேண்டாமா? நான் டயக்னோஸ் செய்து பின் தான் ஒரு முடிவு செய்ய முடியும். குழந்தை வேண்டாம்னு அபார்ஷன் பண்ணியிருக்கிறே...” விவாதம் நடந்திருக்கிறது. ரெண்டு டாக்டர்கள்!விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே அம்ரிதா மூச்சை நிறுத்தி விட்டாள்.
அவளுடைய மரணம் அசட்டையினாலும், அலட்சியத்தினாலும் தான் நடந்திருக்கிறது.
அம்ரிதா 1941ல்இறந்த போது இருபத்தெட்டு வயது.
இவளுடைய தங்கை இந்திராவின் கணவர் சுந்தரம் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் ஆக இருந்தவர். மகன் ராகுல் சிங் பதின்பருவத்தில் இருக்கும்போது குஷ்வந்த் சிங் அப்போது அம்ரிதா பற்றி அவர் பாணியில் எழுதியிருந்திருக்கிறார்.ராகுல் சிங்கை அழைத்துக்கொண்டு ஒரு பார்ட்டிக்கு போயிருக்கிறார். அங்கே இந்திராவும் சுந்தரமும் வந்திருக்கிறார்கள். “ நீ எப்படி என் கொழுந்தியா பற்றி இப்படியெல்லாம் எழுதலாம்? எங்க குடும்ப கௌரவம் என்னாவது?” என்று சுந்தரம் கத்த பதிலுக்கு குஷ்வந்த் கத்த, பார்ட்டியை விட்டே குஷ்வந்த் வெளி நடப்பு செய்திருக்கிறார். ஆனால் பலவருடங்கள் கழித்து இவரும் மகனும் இந்திராவை கசவ்லியில் விட்டு விட்டு அனாதையாய் இந்திரா அங்கே செத்து மறு நாள் பால்காரன் கண்டு பிடித்திருக்கிறான்.
சுந்தரத்தின் மகன் விவன் கூட ஓவியர் தான். விவன் குடும்ப கௌரவமெல்லாம் பார்க்காமல் “ என் பெரியம்மா அம்ரிதா ஒரு லெஸ்பியன்!” என்று சொன்னது மற்றொரு Irony.
AMRITA’s self-portraits were excercises in “NARCISSISM” – Khushwant Singh
....
Painting - Amrita Sher - Gil's portrait of her husband.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.