பெரிய அரசியல் மாற்றம் எல்லாம் திட்டமில்லை போலிருக்கிறது. எம். ஜி. ஆரின் தொடர்ச்சி என்ற தன் பிரமையை கமல் போட்டு உடைத்து விட்டார்.
எம். ஜி.ஆர் மகத்தான தலைவர் என்று ரஜினி ஏற்கனவே சென்ற வருடம் சண்முகத்தின் பல்கலைக் கழகத்தில் புகழ்ந்து தள்ளினார்.
இருவருக்குமே எம். ஜி.ஆர் ஆட்சி பொற்கால ஆட்சி என்ற தீர்மானம் இருந்து கொண்டு தான் இருக்கிறது போலும்.
எம். ஜி. ராமச்சந்திரன் என்ற நடிகர் மீது இவர்களுக்கு சீனியர் என்ற பக்தி இருந்து விட்டுப் போகட்டும். புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் புரட்சித் தலைவரை அரசியல் சீனியராக, குருஜியாக வரித்துக்கொள்ள முயல்வது
- முடியுமா என்பது ஒரு பக்கம் இருக்க,
ரஜினியின் சிஸ்டம், கமலின் நேர்மை பிரச்சாரத்திற்கே எதிரானதாயிற்றே.
விஜயகாந்த்தின் 'கறுப்பு எம். ஜி.ஆர்' பிரமையின் பிரதிபிம்பம் தானே இது?
எம். ஜி.ஆர் ஆண்ட காலங்களில் சினிமாவில் கொடி கட்டிக்கொண்டிருந்த ரஜினியும் கமலும் அதன் பிறகும் முப்பது வருடம் தாண்டி
தாக்குப் பிடித்த சீரான சாதனையாளர்கள்.
அரசியலில் வெற்றி பெற எம். ஜி.ஆர் நிழல் தேவைப்படுகிறது.
கமல் ஹாசன் தன் நெருங்கிய நண்பர் ரஜினியோடு ஈகோ பார்க்காமல் சேரத்தயாராக இருக்கிறார். இப்படி சொன்னதில் தன்னுடைய பகுத்தறிவு ஃபர்னிச்சரை தானே உடைத்துக் கொண்டுள்ளார்.
ரஜினி இப்படி கமலோடு சேரத் தயார் என்று மூச்சே விடவில்லை.
ஆனால் கமல் தான் அடிக்கடி ரஜினி தோள் மீது கை போட முயல்கிறார்.
முழுக்க இடது சாரி தோற்றம் கொண்ட கமல் எப்படி வலது சாரி ரஜினியோடு கொள்கைக் கூட்டணி வைக்க முடியும்.
ஆன்மீக அரசியல் ரஜினி,
பகுத்தறிவு 'பகல்' கமல் இருவரும் சேர்வதிலே 'அமைப்பை மாற்றுவது' , 'நேர்மை' இவற்றிற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது.
இது வரையிலான பொதுவான அரசியல் மந்திரம் - கட்சி கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு என்கிற Cliche, அரசியலில் நிரந்தர நட்பு, பகை கிடையாது என்கிற பிரஸ்தாபம் என்பதையெல்லாம் கமலாலும் ரஜினியாலும் மீற முடியாது என்பது தெளிவாகிறது.
ரஜினி கூற்றின் முடிபு -' எல்லோரும் சேந்து என் தோள்ள வைங்க. இல்லன்னா நான் ஒதுங்கிக்குவேன். '
ஓட்டு கேட்கிற சிஸ்டத்தை வினோத பாணியில் மாற்றுகிறார்.
கமல் யாரோடு கூட்டு என்பதற்கு விடை தேடித் தவிக்கிறார். தனியாய் முடியாது தான்.
இதோடு இவர்களின் 'அரசியல் எம். ஜி.ஆர்' பக்தி ஆபத்தானது.
அது தான் இலக்கு எனில் பத்தாண்டு கால எம்ஜியார் ஆட்சியில் என்னென்னவெல்லாம் காண வேண்டியிருந்தது என்கிற கலக்கம்.
இருவரும் கலைஞர் கருணாநிதி விஷயத்தில் selective amnesia, wilful blindness கொண்டிருக்கிறார்கள்.
Double standard.
ஒப்பீட்டளவில் கலைஞர் கருணாநிதி
' Very reasonable politician '.
ரஜினி, கமல் இருவரையும் விட
ஸ்டாலின் பெரும் தகுதி மிக்கவர்.
பத்தாண்டு காலம் ஆட்சி செய்து விட்ட ஒரு கட்சிக்கு நியாயமாகவே இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் கொடுக்கப்படக்கூடாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.