Share

Dec 29, 2020

மௌத் ஆர்கன்

சிறுவனாய் இருந்த காலத்தில் ஒர் விளையாட்டுப் பொருளாகவே பார்த்த ஒரு வாத்தியம்

 மௌத் ஆர்கன். 

இதை ஒரு விளையாட்டு சாமானாக பயன்படுத்தாத குழந்தைப் பருவம் இருந்திருக்க முடியாது. 

The best selling musical instrument. 


பழைய படங்களில் முக்கிய இடம் பெற்ற 

இசை வாத்தியம். 


'கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்'


'பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு'


'முத்துச்சிப்பி மெல்ல மெல்ல பிறந்து வரும்'


படங்களில் ஒரு கதாபாத்திரமாக மௌத் ஆர்கன் இடம் பெற்று க்ளைமாக்ஸை கலக்கும். 


'ஆசைமுகம்' எம். ஜி.ஆர் மௌத் ஆர்கன் வாசிப்பார். எம். ஜி. ஆராக மாஸ்க் போட்டு வேஷம் போடும் எஸ். வி. ராமதாஸுக்கு 

இது பின்னடைவை ஏற்படுத்தும். 


'ஷோலே' அமிதாப் பச்சன்

 மௌத் ஆர்கன் தீம் மியூசிக். 


நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையன் எனக்கு சீனியர். பல ராமன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னிடம் 'ஆறாம் வகுப்பு ரொம்ப கஷ்டம்' என்று பயமுறுத்துவான். 


இவனால் எனக்கு இன்னொரு சிரமமும் ஏற்பட்டதுண்டு. 


Balaraman bought a mouth organ and taught himself. 


இந்த மௌத் ஆர்கன் என்னுடைய பெரிய எதிரி. 


"இப்ப நான் வாசிக்கிற சினிமா பாட்டு என்ன பாட்டுன்னு கண்டு பிடி" என்று மௌத் ஆர்கனை வைத்து வாசிப்பான். 


அவன் மௌத் ஆர்கனில் வாசிக்கிற பாட்டை நாரதர் கேட்டாலும் கண்டு பிடிக்க முடியவே முடியாது. 


நான் எவ்வளவோ பெரு முயற்சி செய்து 'இந்த பாட்டு தானே?' என்பேன். 


'தப்பு, நீ தான்டா தோத்த, 

என்னடா இந்த பாட்டு தெரியலையா? ' என்று நோஸ்கட் செய்வான். 


இந்த பாட்ட கண்டுபிடி. கண்டு பிடின்னு பலராமன் பிடிவாதம் பண்ணிக்கிட்டே இருப்பான். 


பின்னால் நிஜமாகவே மௌத் ஆர்கன் நன்றாக வாசிக்கிற எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். 


ஒருத்தன் மூக்காலேயே வாசிச்சி அதை

' Nose Organ'  ஆக ஆக்கியிருக்கிறான். 


Mouth Organ - the most voice like instrument. 

A great instrument. 


ஸ்டீவி ஒன்டர். 

பாடகர். 

Talking Book ஆல்பத்தில 'You are the Sunshine of                  my life' 


பார்வையிழந்தவர். பிரமாதமாக பாடுவார். 

ஆனால் பாடுவதைக் காட்டிலும் ஸ்டீவி ஒன்டர்                                               மௌத் ஆர்கன் அற்புதமாக வாசிப்பார் என  சொல்வார்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2961210620759051&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.