R. P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' புத்தகத்தில் :
சாண்டோ சின்னப்பா தேவர் ' தெய்வச்செயல்' படம் மேஜர் சுந்தர் ராஜனை
கதாநாயகனாக்கி எடுத்தார்.
' பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்
மிருகம் கூட நண்பனே '
கொஞ்ச நாளில் அதை தூசி தட்டி ஹிந்தியில் அப்போது உச்சத்தில் இருந்த ராஜேஷ் கன்னா கதாநாயகனாக 'ஹாத்தி மேரே சாத்தி 'யாக்கி
படம் அகில இந்தியாவிலும் சூப்பெர் ஹிட்.
அதையே மீண்டும் தமிழில் எம்ஜியாரை வைத்து
' நல்ல நேரம் ' வியாபார ரீதியில் நல்ல லாபம்.
பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான்.
இதில் மேஜர் -ராஜேஷ் கண்ணா -எம்ஜியார் மூவருமே எவ்வளவு மாறுபட்டவர்கள்.
மூவரும் ஒரே கதையின் நாயகர்கள்.
தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ’ராமுடு,பீமுடு’ படத்தை நாகிரெட்டி தமிழில் 'எங்க வீட்டு பிள்ளை'யாக எம்ஜியாரை வைத்து,
ஹிந்தியில்' ராம் அவ்ர் ஷியாம் ' - திலிப் குமார் கதாநாயகனாக வைத்து தயாரித்தார்.
தமிழ் தெலுங்கு போல் ஹிந்தி பெரிய ஹிட்.
கொஞ்ச வருடம் கழித்து முக்கிய ரெட்டை கதாபாத்திரங்களை பெண்ணாக்கி
ஹேமா மாலினி நடிக்க ' சீதா அவ்ர் கீதா' ஹிந்தியில் சூப்பர் ஹிட்.
உடனே தமிழில் வாணி-ராணி என்று எடுக்கப்பட்டது.
'சீதா அவ்ர் கீதா ' ஹிட் ஆகியிருந்த நேரம்.
மற்றொரு ஹிந்தி படத்தில் ஹேமா மாலினி, ஜிதேந்திரா, அமிதாப் பச்சன் நடித்துக்கொண்டிருந்தார்கள்.
கிளைமாக்ஸ் கடைசி சண்டைக்காக
ஹேமா மாலினியை
மோசமானவர்களிடம் இருந்து காப்பாற்ற அமிதாப்பும், ஜிதேந்திராவும்
கடுமையாக ரிகர்சல் பார்த்து விட்டு
செட்டுக்கு போனார்கள்.
அங்கே இவர்களை கட்டிப்போட்டார் இயக்குனர். ஹேமா மாலினி
மோசமானவர்களிடம் "கட்டி புரண்டு, கட்டி கட்டி புரண்டு புரண்டு "
கடுமையாக சண்டையிட்டு
அமிதாப்பையும் ஜிதேந்திராவையும் காப்பாற்றினார்.
கதை மாற்றப்பட்டுவிட்டது.
'சீதா அவ்ர் கீதா' ஹேமா மாலினி சண்டை மக்களுக்கு
ரொம்ப, ரொம்ப பிடித்துப்போய் விட்டது.
அதனால் இந்த படத்தில்
கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ஹேமா சண்டை.
'ஆங்கிரி எங் மேன் ' அமிதாப் பச்சன்
மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும்.
வழக்கமா கதாநாயகன் தான்
கிளைமாக்ஸ் காட்சியில
"தும்பிக்கைய தரையிலே ஊனி,
நாலு காலையும் மேலே தூக்கி
சங்கு சக்கரமா சுத்துவான். "
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.