Share

Feb 1, 2021

சமயவேல்

 'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான்                எட்டயபுரம் தலப்பா கட்டி. 


ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல

“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”


அந்தக் கவிதை முடிவது இப்படி-

”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் 

என் தூரிகை நகர்கிறது.”


... 


It is the possibility of having a dream come true

 that makes life interesting.

 Never stop dreaming.”


Alchemist நாவலை 1988ல் பவுலோ கொயலோ எழுதியிருக்கிறார்.


“ஏதேனும் ஒரு அழகிய கனவு

என்றும் என்னுடன் இருந்து வருகிறது.........

கனவுகள் உடைந்து தகர்வதைப் பற்றி

கவலைப்படக் கூட முடியாமல்

மீண்டும் மீண்டும்

புதிது புதிதாய் முளைக்கும் கனவுகள்


கனவாற்றின் கரைகளில் தானே

வாழ்க்கை கொஞ்சம் தலைசீவி அழகு கொள்கிறது


கனவுகளற்ற பாலை நாட்கள்

வரவே வேண்டாம்

ஏதேனும் ஒரு அழகிய கனவு

என்றும் என்னுடன் இருக்கட்டும்.”


சமயவேலின் மேற்கண்ட கவிதை இடம்பெற்றுள்ள

’காற்றின் பாடல்’ கவிதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு வெளி வந்திருக்கிறது.


,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.