1972ல் அக்டோபர் 10ம்தேதி
எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது
கலைஞர் மு. கருணாநிதியுடன் தான் எம்.எல்.ஏக்கள்.
எட்மண்ட், காளிமுத்து போல இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள்.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சபாநாயகர் ‘மேதை’ மதியழகன்
அப்போது எம்.ஜி.ஆர் ஆதரவாளர்.
சபாநாயகர்
இப்படி செய்த அதிசயம்
அன்று மிக அபூர்வ நிகழ்வு தான்.
டிசம்பர் 2ம் தேதி தமிழக சட்டசபை
ஒரு விசித்திர சரித்திர நிகழ்வைப் பார்த்தது.
சபாநாயகர் மதியழகன் சபையை கொண்டு செலுத்த முயன்ற போது
உதவி சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் ப்ரமோஷனில் நான் தான் சபாநாயகர் என்று அவரும் சபையை
கலைஞர் மு.கருணாநிதிக்கு சாதகமாக
நடத்த ஆரம்பித்தார்.
மதியழகன் செய்ததையெல்லாம்
சீனிவாசன் நிராகரித்தார்.
சீனிவாசன் செய்ததையெல்லாம்
மதியழகன் புறந்தள்ளினார்.
குழப்பம் மிகுந்த நிலையில் மதியழகன்
சபையை ஒத்தி வைத்து விட்டு
சட்டசபையிலிருந்து வெளியேறினார்.
உடனே முதல்வர் கலைஞர் ஒரு தீர்மானத்தை நெடுஞ்செழியனை கொண்டு வரச்செய்து சபாநாயகர் பதவியிலிருந்து
மதியழகனை நீக்கி விட்டார்.
தற்காலிக சபாநாயகராக
சீனிவாசன் ஆக்கப்பட்டார்.
அமளியில் எம்.ஜி.ஆர் மீது செருப்பு வீச்சு.
எம்.ஜி.ஆரின் பிரபலமான வசனம் “ சட்டசபை செத்து விட்டது.”
இந்த விஷயம் செய்தித்தாள்களுக்கு நல்ல தீனி.
..
எம்.ஜி.ஆர் மறைந்த பின்
முதலமைச்சர் ஆக்கப்பட்ட ஜானகியிடம் தான் பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்.( 98 பேரா? 96?)
1988 ஜனவரி 28ம்தேதி சட்டசபையில் பி.ஹெச்.பாண்டியன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றி பெறச்செய்ய எதிரணி எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்தார்.
தீர்மானத்தை கவனிக்காமல்
சபையை ஒத்தி வைத்தார். Sky is my limit!
அன்று சட்டசபை அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிதடி.
மைக்கை கழட்டி அடித்தவர்கள் உண்டு.
சட்டசபையில் வால்டர் தேவாரம் நுழைந்து
காவல் துறை எம்.எல்.ஏக்கள் மீதே லத்தி சார்ஜ் செய்ய நேர்ந்துள்ளது.
அன்று ஒரு ஜானகி அணி எம்.எல்.ஏ. சட்டசபையில் பலரை மைக்கால் பதம் பார்த்து விட்டு வேறு யாராவது சிக்குகிறார்களா என்று மைக்கோடு நடக்கிற காட்சி புகைப்படமாக
பத்திரிக்கையில் சந்தி சிரித்தது.
A horse! A horse! My Kingdom for a Horse!
- Richard the third
Shakespeare
...........
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.