ஒரு கவிங்கன். என்னுடைய பதிவுகளில் பல தடவை அவன் கவிதைகளை குறிப்பிட்டு கௌரவித்திருக்கிறேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.
ஒரு வெளி நாட்டு வலைத்தள பத்திரிக்கையில் அதற்கும் முன்னரே நான் ஒரு ஆங்கில கட்டுரையில் அவன் பெயரை குறிப்பிட்டிருப்பதை எனக்கு ஞாபகப்படுத்தி அலை பேசியிலயே ஷேக் ஹேண்ட் கொடுத்து வால ஆட்டினான்.
என் எழுத்து பற்றி ஓஹோ என்று கடலளாவ ஒரு மணி நேரம் பேசி களிப்புற்றான்.
I'm a versatile personality.
சென்ற வருடம் கூத்துப்பட்டறையில் என் Transformative Acting பார்க்க வருமாறு அழைத்தேன்.
Performance நடக்க இருந்த அன்று காலை நினைவு படுத்தினேன். மாலை என் நடிப்பை பார்க்க வருவதாகத் தான் சொன்னான்.
மாலையில ஒரு நல்ல பெரிய கேட்பரிஸ் சாக்லேட் நூறு ரூபாய்க்கு வாங்கினேன். க்ரியா வெளியீடான "குட்டி இளவரசன்" நூற்றி இருபது ரூபாய்க்கு வாங்கினேன். அவனுக்கு புத்ர பாக்யம் உண்டு. அதற்கு இவனிடம் கொடுத்து விட எண்ணி இதை வாங்கினேன்.
என்னுடைய சுபாவம் இது.
என் நடிப்பை ஆரம்பிக்கு முன், வந்து கொண்டிருக்கிறானா என மீண்டும் கேட்டேன்.
பதில் சலிப்பாக எதிர்மறையாக வந்தது.
சாக்லேட்டை அன்று என் நிகழ்ச்சிக்கு மூன்றாவது தடவை பார்க்க வந்த என் ரசிகருடன் வந்திருந்த அவருடைய குழந்தைக்கு கொடுத்தேன். அவர் முதல் முறையாக என் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போய் 'சினிமா பார்க்கும் போது கூட இப்படி சிரித்ததேயில்லை சார்' என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்.
சில நாள் கழித்து குட்டி இளவரசன் நூலையும் அதை வாசிக்க தகுதியான இன்னொரு குழந்தைக்கு அன்பளிப்பாக தந்து விட்டேன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.