Share

Sep 13, 2019

இந்துநேசன்



இந்துநேசன் - இன்றைய காலத்தில் இந்த வார்த்தை ஏதோ ஆரெசஸ், பீஜ்ஜேப்பி அனுதாபி, தொண்டரை ஞாபகப்படுத்துவது போல தோற்றம் தரலாம்.
ஆனால் அந்த காலத்தில் சினிமா பிரபலங்கள் மீது சேறு தெளித்த மஞ்சள் பத்திரிக்கை இது.

1940 களிலேயே தியாகராஜ பாகவதரையும், என். எஸ். கிருஷ்ணனையும் பாடாய் படுத்தி அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் பாழாக்கிய பத்திரிக்கை. லட்சுமி காந்தன் கொலை வழக்கு பிரபலம் தெரிந்த விஷயம்.

மாதுரி தேவி கிறித்துவ பெண். க்ளாரா என்று பெயர். இவர் அண்ணன் ஒரு ரவுடி. தியாகராஜபாகவதர், என் எஸ் கிருஷ்ணன் தண்டனை அனுபவித்த 'இந்து நேசன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' க்ளாராவின் அண்ணன் சம்பந்தப்பட்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
பின்னால் க்ளாரா 'மாதுரி தேவியாக' பிரபலமானார்.


இன்றைக்கு இண்டெர்னெட், மொபைல் மூலம் எவ்வளவோ வேண்டாத விஷயங்கள் சிறுவர் சிறுமியர் பார்க்கக் கிடைக்கிறது.

ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னெல்லாம்  மஞ்சள் பத்திரிக்கை
’இந்து நேசன்’ பத்திரிக்கை விலைக்கு வாங்கி படிக்கவேண்டிய தேவையில்லாமலே பத்திரிக்கை கடைகளில் தொங்குகின்ற இந்து நேசன் வால் போஸ்டரிலேயே பல ’பலான’ செய்திகள் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று சிறுவர்களுக்குக் கூட இருந்தது. பள்ளிகளில் ஒவ்வொரு இந்து நேசன் இதழ் செய்தியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

அப்படி மனதில் பதிந்த செய்திகள் கால காலமாக அந்தக் கால சிறுவர்கள் நினைவை விட்டு அகலவே செய்யாது.

  ’கே.ஆர் விஜயாவுடன் ’லூஸ்’ சந்திரபாபு ஜல்சா!’

பெண்ணோடு பெண் உடலுறவு – ’வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் எஸ்.என்.லட்சுமி ஜல்சா!’

 இந்து நேசன் பத்திரிக்கை 1968,1969லெல்லாம் கே.பாலச்சந்தர் பற்றி ’கர்ப்பதான டைரக்டர்’ என்றே குறிப்பிட்டு எழுதியது.
 அவருடைய பட நாயகிகள் கர்ப்பத்தை கலைக்க அடிக்கடி அபார்ஷன் செய்ய வேண்டியிருந்ததாக இந்து நேசன் எழுதியது. சௌகார் ஜானகி, ஜெயந்தி இருவரையும் தான் பாலச்சந்தருடன் இணைத்து இந்து நேசன் எழுதியது.

இந்து நேசனின் Soft target ஆக அன்று கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இருந்தார். அவருடைய தம்பி கே.எஸ்.சபரிநாதன் பற்றி கூட இப்படி போட்டுத் தாக்கியது.

……………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.