அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி. நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார்.
மதத்திற்கு விரோதமான கருத்துக்கள்
அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது.
அவர் எழுதிய குட்டி கதை ஒன்று.
' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார். அப்போது மழைக்காலம்.
அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம்.
பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன
என எண்ணி அயர்ச்சியடைகிறார்.
“Quiet. I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார்.
தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன. பயங்கர அமைதி.
பாதிரி சந்தோசமாக
உரக்க கூவி பிரார்த்திக்கிறார்.
“My Father, Who art in heaven”
வானத்திலிருந்து ஒரு அசரிரி
“OK, I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?”
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.