’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரம் தலப்பா கட்டி.
ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”
அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”
Writer 's block.
எழுத்தாளனுக்கு எப்படியும் தொற்றும் வியாதி.
ஹெமிங்வே எழுத்து தடைப்படுவதை சகிக்க முடியாமல், எழுத எதுவும் இல்லையோ, ஊற்று வற்றி விட்டதோ என்ற தவிப்பில் தான் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான்.
எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு கொடுக்கப்பட்டது. அப்புறமும் அவனுடைய தேர்வு, தீர்வு தற்கொலை தானே.
கி. ராஜநாராயணன் ஒரு தீராத ஊற்று.
அவருடைய 'இந்த இவள்' நாவலில் எழுதியுள்ள விஷயம் கீழே :
"மழையைப் போலத் தான் எழுத்தும்.
மழைப்பேறும் பிள்ளைப் பேறும் எப்போ என்று மகா தேவனுக்கே தெரியாதாம்.
வில்லைக் கையில் எடுத்தாச்சி, அம்பையும் வைத்துக் குறியைப் பார்த்து இழுத்தாச்சி.
இடையில் எந்த ஒலிக் குறிக்கீடும் இருக்கக்கூடாது.
தாளின் மேல் பேனா ஊன்றி நாட்டியம் தொடங்கி விட்டால், அல்லது யோசித்து நின்று கொண்டிருக்கும் போது, மேலேயிருந்து ஒரு பல்லி விழுந்தால் கூட அனைத்தும்
அணைந்து போய் விடும்.
இவை எல்லோருக்கும் அல்ல.
" வாகையடி முக்கில் வந்து தேர் விழுந்து விட்டது " என்பாராம் புதுமைப்பித்தன்.
நடு வழியில் வந்து படுத்துக் கொள்ளும்
நாவல் - மாடு - ரொம்பவே உண்டு என்று
சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார்."
I'm not running out of Writer's Ink.
..

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.