Share

Mar 8, 2020

தெய்வாம்சமும் மிருகாம்சமும்




போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர்
 எழுதிய சிறுகதை.
'யூதாசின் முகம் ' என்ற தலைப்பு.

சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய ஆரம்பிக்கிறார்.
குழந்தை ஏசு வின் ஓவியம் வரைய அவருக்கு
மாசு மரு இல்லாத ஒரு முகத்தை தேடியிருக்கிறார்.

 ஒரு நாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்க்கிறார்.
அழுக்காக இருந்தாலும் அந்த பால் முகம் தான் அவர் தேடிய முகம் என்பதால்
அந்த சிறுவனை அழைத்து கொண்டு போய் அவனுடைய அழகிய முகத்தை
குழந்தை ஏசுவாக வரைகிறார்.

யூதாஸ் ஓவியம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகி விட்டது
. ஏசுவை காட்டிகொடுத்த கயவன் முகம்.
பல வருடம் தேடியும் அவர் எதிர் பார்த்த
தீய , காம, கொடூர முகம் கொண்ட பல மனிதர்களை அவர் காண நேர்ந்தும்
ஓவியருக்கு யூதாஸ் முகம்
என யாரையும் தேர்வு செய்ய இயலவில்லை.

வருடங்கள் ஓடி விட்டது.
ஒரு நாள் வைன் குடிக்க பார் போயிருந்த போது ஒரு ஆள் 'வைன், எனக்கு வைன் வேண்டும் ' என புலம்பியவாறே பார் வாசலில் விழுகிறான்.

 வைன் அருந்திகொண்டிருந்த ஓவியர் எழுந்து வந்து அவனை தூக்கி பார்க்கிறார்.
 ஆச்சரியம். அவர் எதிர்பார்த்த
கொடூர ,பயங்கர முகம் கொண்ட மனிதன் அவன்.
அதி பயங்கர மிருக முகம்.

'வா, உனக்கு வைன், உணவு ,உடை தருகிறேன் ' என அழைத்துக்கொண்டு போய் அவனையே யுதாசாக வரைய ஆரம்பித்தார்.

இரவும் பகலுமாக வரைந்து கொண்டிருந்த நிலையில் அவன் அழ ஆரம்பித்தான்.

" உங்களுக்கு என்னை தெரியவில்லையா ? என்னைத் தான் நீங்கள் பல வருடங்கள் முன் 'குழந்தை ஏசு'வாக வரைந்தீர்கள்.
என்னை உங்களுக்கு இன்னுமா அடையாளம் தெரியவில்லை?"

தேம்பி தேம்பி அழுதான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.