அப்பாவின் உடல்
freezer box ல்.
பார்க்கும் போது நாற்பத்திரண்டு வயதில் பார்த்த அப்பா போல தோற்றம்.
ஒரு நாற்பது வயது திடீரென்று காணாமல் போய் விட்டதா?
freezer box ல்.
பார்க்கும் போது நாற்பத்திரண்டு வயதில் பார்த்த அப்பா போல தோற்றம்.
ஒரு நாற்பது வயது திடீரென்று காணாமல் போய் விட்டதா?
இறந்த மனிதர் போலவே இல்லை.
அழகான ஒரு நடுத்தர வயது மனிதர் உறங்குவது போல தெரிகிறது.
சாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தவறாமல் சொன்ன விஷயம் - " இறந்த உடல் என்றே நம்ப முடியவில்லை"
"பிணம் இவ்வளவு அழகாக பார்த்தது
இது தான் முதல் தடவை. "
இது தான் முதல் தடவை. "
அப்பா இறப்பதற்கு போராட ஆரம்பித்த சமயம் நான் சென்னையில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தேன். என் உடல்நிலை ஆரோக்கியமாயில்லை. திடீரென்று அப்படி ஆயிற்று.
திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கி,
மூத்த மகன் கீர்த்தி பைக்கில் பின்னால் அமர்ந்து வீடு வரும் போது ரோட்டில் மயங்கி சரிந்து விழுந்து விடுவேனோ என்று பயமாயிருந்தது.
மூத்த மகன் கீர்த்தி பைக்கில் பின்னால் அமர்ந்து வீடு வரும் போது ரோட்டில் மயங்கி சரிந்து விழுந்து விடுவேனோ என்று பயமாயிருந்தது.
அந்த இரவு மதுரையில் அப்பா மரணப்போராட்டம்.
இங்கே என்னால் ஒரு நிமிடம் தூங்க முடியவில்லை.
என் உடல் நிலை படாத பாடு பட்டது.
இங்கே என்னால் ஒரு நிமிடம் தூங்க முடியவில்லை.
என் உடல் நிலை படாத பாடு பட்டது.
காலையில் அப்பா இறந்து விட்ட செய்தி.
நான் கீர்த்தியை இறுக்க பற்றிக்கொண்டேன்.
டாக்டரை பார்த்த பின் மதுரை கிளம்பினேன்.
நான் கீர்த்தியை இறுக்க பற்றிக்கொண்டேன்.
டாக்டரை பார்த்த பின் மதுரை கிளம்பினேன்.
மதுரைக்கு போன பின்னர் என் உடல் நிலை இன்னும் மோசமாகியது. காலையில் மீண்டும் ஒரு முறை ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்தது.
அப்பா உடலை freezer box ல் இருந்து எடுத்து இறுதி யாத்திரைக்கு ஆயத்தப் படுத்திய போது நானே நினைக்கிறேன் " இறந்து முப்பது மணி நேரம் ஆன பின்னும் அப்பா முகத்தில் இவ்வளவு தேஜஸா?"
யாரோ ஒரு அம்மாள் பதற்றத்துடன் சொல்கிறார்
" டாக்டர கூப்பிடுங்கங்க. உயிரோட தான் இருக்கிற மாதிரி தெரியுதுங்க. உயிரு இருக்குது.
டாக்டர கூப்பிட்டு எதுக்கும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணிடுங்க "
" டாக்டர கூப்பிடுங்கங்க. உயிரோட தான் இருக்கிற மாதிரி தெரியுதுங்க. உயிரு இருக்குது.
டாக்டர கூப்பிட்டு எதுக்கும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணிடுங்க "
நான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதபடி உடம்பு படுத்தியெடுத்து விட்டது.
......... ...................................................................
............... ..............................................................................
1. அப்பாவின் மடியில் கீர்த்தி, பின்னால் நிற்பது ராஜநாயஹம்
2. அப்பா
3. அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.