ஜூனியர் விகடன் கழுகார் நோட்
- எம். ஜி.ஆர் அண்ணன் சக்ரபாணியின் மகன் சந்திரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தரப்பிடம் சில உதவிகள் கேட்டும் யாருமே கண்டு கொள்ளவில்லையாம்.
இதை பார்த்த நேற்றே ஹிண்டு பேப்பரில்
Obituary column அவருடைய இறப்பு செய்தி பார்க்க கிடைத்தது.
எம். ஜி.ஆர் வாழ்க்கையின் பிஸியான 1950, 60 களில் அவருடைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தன் தோள் கொடுத்தவர் பெரியவர் சக்ரபாணி.
வரவு செலவு விவகாரங்களில், கால்ஷீட் விஷயங்களிலெல்லாம் அந்த சின்னவர் செய்த தவறுக்கெல்லாம் பெரியவர் தான் பொறுப்பேற்று கெட்ட பெயர் வாங்கியவர்.
நல்லது எல்லாம் சின்னவருக்கு
கெட்டதெல்லாம் தனக்கு என்று பெரியவர் ஏற்றார்.
ஜானகியம்மாள் கை ஓங்கிய பின் பெரியவர் ஏமாந்து நின்ற நிலை என்று சொல்வார் உண்டு.
தனக்கு கிட்னி கொடுத்தவர் பெரியவர் மகள் லீலாவதி என்பதே சின்னவருக்கு
ரொம்ப பின்னால் தான்
தெரிய வந்திருக்கிறது.
பெரியவர் மகனுக்கு இப்படி அலட்சியம் காட்டியிருக்க வேண்டாம்.
...
ஆனந்த விகடனில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
" என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராத்தான் நான் அரசியலுக்குள்ள வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். "
நல்லது. For this relief much thanks.
தீபாவின் அடுத்த அகலக்கால்
" என்னோட கனவு ஒருஎழுத்தாளரா ஆகணும்கிறது தான். இனி அதை நோக்கித் தான்
என் பயணம் இருக்கும் "
எழுத்துலகம் பராக் பராக்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.