அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது. அசோகமித்திரனிடம் அப்போது
அலை பேசி உரையாடிய போது சொன்னார் 'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'
கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? எதிர்பார்ப்பில் வருடங்கள் ஓடுகின்றன.
' தமிழில் ஞான பீட பரிசு பெற்ற
அகிலனை காட்டிலும் மிகப் பெரும் தகுதி
தி. ஜானகிராமனுக்கு இருந்தும் அநீதி நடந்தது.
பின்னர் இதே விருதைப் பெற்ற ஜெயகாந்தனை விடவும் கூட தி. ஜானகிராமன் பேரிலக்கிவாதி. அசோகமித்திரனும, கிராவும் கூட
ஜெயகாந்தனை விட சாதனையாளர்கள் தான்.'
என்று நான் ஆதங்கப்பட்டு சொன்ன போது
பதிலாக சரவணன் மாணிக்கவாசகத்தின் குறும்பான பகடி :
'சித்திரப்பாவைக்கு கொடுத்தது அநீதி. வேங்கையின் மைந்தனுக்குக் கொடுத்திருக்கலாம். அதில் குதிரையெல்லாம் வந்தது.'
போன வருஷம் ஒரு செய்தி கண்ணில் விழுந்தது.
ஒரு முன்னணி தமிழ் திரை நடிகர் ஏதோ
ஒரு மளையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக.
அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் முட்டையிடும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.