Share

Sep 1, 2020

பிரணாப் முகர்ஜி

 பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் அவருடைய inconsistency பற்றி நினைவுக்கு வருகிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து 

விசுவாசமாக இருந்தவர் அல்ல. 


இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது 

ராஜீவ் காந்தியிடமே " இப்போது நான் தானே உடனடியாக பிரதமராக பதவியேற்க வேண்டும்?         சீனியர் மோஸ்ட் காபினெட் மினிஸ்டர் நான்.. " சந்தேகம் கேட்டவர். 


ராஜீவ் எரிச்சலாகி "இப்படி ஒரு நெனப்பா" என்று  அவரே பிரதமரானார். 

அப்புறம் மத்திய மந்திரிசபையிலும் பிரணாப்புக்கு இடமில்லை. 


தொடர்ந்து நடந்ததெல்லாம் வேடிக்கை. 


தன் சொந்த மாநிலத்தில் செல்வாக்கில்லாதவர். 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். அப்புறம் மீண்டும் காங்கிரஸில் வேறு வழியில்லாமல் இணைந்தார். 


மன்மோகன் சிங் பிரதமரான போது கூட 

பிரணாப் முகர்ஜிக்கு "வட போச்சே" தவிப்பு தான். ஏனென்றால் இவர் நிதியமைச்சராயிருந்த போது மன்மோகன் சிங் ரிசர்வ் பேங்க் கவர்னர். 


ஜனாதிபதியான பின் காங்கிரஸ் தோல்வி. 

பி. ஜே. பி. அரசு வந்த பிறகு இவருடைய செயல்பாடுகள் பற்றி காங்கிரசுக்கு 

வருத்தம் இருந்தது. 


பாரத ரத்னா விருது கூட வாங்கி விட்டார். 


இந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்து பாரதீய ஜனதா ஆட்சி வரை நிறைய தாக்கங்களை காட்சிப் படுத்தியவர் பிரணாப் முகர்ஜி.


மேலோட்டமாக வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கு வங்க அரசியலில் ஜோதி பாசு, மம்தா பானர்ஜி இருவரின் ஆளுமை மிக்க ஸ்தானங்களை பார்த்தாலே 

பிரணாப் முகர்ஜி மக்கள் செல்வாக்கு இல்லாத பலஹீனமான வங்க அரசியல் வாதி 

என்பது தெரியும். 

இவரால் அந்த மாநிலத்தில் 

காங்கிரஸ் கண்ட பலன்?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.