Share

Sep 14, 2020

அன்ன விசாரம்

 ரயில் பிரயாணம் வருகிற 

தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 

'சிலிர்ப்பு',

 'மனதிற்கு... '

' அக்பர் சாஸ்திரி' எல்லாம் 

கண் முன் வந்து நிற்கிறது. 


ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு 

தி. ஜா. கதை 

'அன்ன விசாரம் அட்டகாசம். 


'கச்சேரி'தொகுப்பில் உள்ள கதை. 


அறுபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 


எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 


மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 


ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 


' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '


' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'


'உப்புமா, தோசை, பொங்கல், வடை 

எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய். 

கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது 

ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '


' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். 

நெய்யைக் கக்கும் '


வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும் அந்த கிழப் பயணி. 


ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு

 அந்தப் பெரியவர் சொல்கிறார் :

"ஒரு அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு "


.. 


DINNER! MUSIC!


விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. 

இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது.                        Dinner Items. 


இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 

அப்படி ஒரு விருந்து. 


பர் லாகர் க்விஸ்ட் எழுதிய

"THE DWARF" நாவலில். 


இந்த ஸ்வீடிஷ் நாவலை 

தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்

' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.


.. 


Music with dinner is an insult

 both to the cook and the violinist.

- G. K. Chesterton 


Dinner. Dinner Items. 

Music. 

விருந்து, இசை இரண்டையும் 

ஜேம்ஸ் ஜாய்ஸ் 

மிக அழகாக தன்னுடைய' The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார்.

உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 


தி.ஜானகிராமன்

 இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல 

சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார். 


....................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.