Share

Aug 5, 2012

கிருஷ்ண மூர்த்தி.S ப்ளாகில்

என் ஆன்மாவை,நேர்மையை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மிகவும் நெகிழ்ச்சியாயிருக்கிறது.

Kaveri Ganesh, SensheSenshe இருவருக்கும் என் அன்பும்,நன்றியும்.

Dyno Buoy  குறிப்பிடும் Christmas eve eve விஷயத்தில் அவருடைய அனலைஸை Christ never Laughed பதிவிலேயே சேர்த்து விட்டேன். என்றாலும் அவருடைய அனலைஸ் ந்யூ ஜெர்சிக்கு மட்டுமானதா,ஒட்டு மொத்த U.S. மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குமானதா?
Factual Integrity என்னிடம் உறுதியாக இருக்கிறது.உண்மைகளை சத்தியமாக நான் மிகைப் படுத்துவது இல்லை. Factual Error ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால் உடன் திருத்திக்கொள்ளவே செய்கிறேன்.
Dyno Buoy Sir!Kabheesh S Sir,நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என் வணக்கம்.
...
Kabeesh  நீங்கள்  டைனோ என்ன சொல்ல வரார்னு தான் எழுதியிருந்தீங்க.
I apologize. சென்ற வரியில் உங்களைச் சேர்த்தது என் தவறு தான்.
இன்று கிருஷ்ணமூர்த்தி சார் ப்ளாகில் என்னைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை இந்தப் பதிவில் கடைசியில் சேர்த்திருக்கிறேன்.நன்றி.

............

Krishna Moorthy S
Aug 3, 2012 - Public
படங்களில் பேதி மருந்து சாப்பிட்டு விட்டது போல் ஒரு முழி.சமயத்தில் திருட்டு முழி போலவே இருக்கும். ஒரு நிமிஷம் ‘two toilet' போய் விட்டு வந்தால் சிரமம் குறைந்து விடும் என்பது போல ஒரு restlessness.சிரிப்பதற்கே கூட தேவையேயில்லாமல் ரொம்பத்தான் டென்ஷன் ஆவார்.

ஏதோ மலையை தூக்கி சுமப்பது போல, இந்த ரோலை நான் ரொம்ப பிரயாசையுடன் செய்கிறேனாக்கும் என்ற தோரணை. ரசிகப்பெருமக்களுக்கு ஆயாசமும் சலிப்பும் வருமா வராதா?

+Kabheesh S ஆர்பிஆர் மாதிரிப் பத்தி எழுத்து, வலைப் பதிவில் எழுதுவது எப்படி என்று புரிந்துகொண்டு எழுதுகிறவர்கள், தமிழில் அனேகமாக இல்லை!
+Dyno Buoy ஆர்பிஆர் எழுத்தையா அதீதம் என்று சொல்கிறீர்கள்? AVM ராஜனைப்பற்றிய இந்தப் பதிவை நன்றாக இன்னொருதரம் படித்துவிட்டு எது அதீதம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்! :-))
R P ராஜநாயஹம்: A.V.M. ராஜன் »
ஜெமினி கணேஷ் சாயலில் சிவாஜி கணேசன் போல நடித்தால் எப்படி இருக்கும். அது தான் AVM ராஜன். 1963ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர்-விஜயகுமாரி-ரங்காராவ்-எம்.ஆர்.ராதா நடித்த 'நானும் ஒரு ...
Hide comments


Kabheesh SAug 3, 2012


//Kabheesh S ஆர்பிஆர் மாதிரிப் பத்தி எழுத்து, வலைப் பதிவில் எழுதுவது எப்படி என்று புரிந்துகொண்டு எழுதுகிறவர்கள், தமிழில் அனேகமாக இல்லை!// அன்ஃபார்ச்சுனேட்லி நான் எழுதி நீங்க படிச்சது இல்ல. அதான் இப்படி சொல்றீங்க.
டைனோ என்ன சொல்றார்னா ஃபேக்ட்ஸ இவர் மிகைப்படுத்துவார்னு.

kaveri ganeshAug 3, 2012


மனுசன் பின்னி, பெடலெடுக்கிறார்..

Krishna Moorthy SAug 3, 2012


கபீஷ்!நீங்கள் இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்!(ரெண்டு நாளைக்கு முன்னாடிதான், தனியா ஒரு வலைத்தளம் வச்சிருந்து, அதில் எழுதினதெல்லாம் அழிச்சிட்டேன்னு ஒரு ப்ளஸ் சில்ஒப்புதல் வாக்குமூலம் இருக்கிறது!) :-))))))

அப்புறம், மிகைப் படுத்துதல் என்றால் என்ன? ஒரு வகையில் எல்லாமே மிகைப்படுத்தப்படுவது தான்! மிகைப்படுத்தல் என்பது highlighting a character or an important moment. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாகேஷ் வைத்தி காரக்டரை, இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ என்ற ஒரு வசனத்தில் உயிர்ப்பிப்பார்.

பதிபக்தி திரைப்படத்தில் சிவாஜி கொட்டுகிற மழையில் உருண்டு புரண்டு வசனம் பேசிக் கொல்கிற அந்த ஐந்து நிமிடக் கொடுமையை மிகைப்படுத்தல் என்று ரகப்படுத்தமுடியாது. ஓவர் ஆக்டிங் என்று தள்ளி விட முடியாது!பார்க்கிரவனைக் கொலை செய்கிற படுபாதகம்!சிவாஜியை மிஞ்சின கொடுமை AVM ராஜன்! அதை நாலே வரிகளில்,இந்தப் ப்ளஸ்சின் முதல் பாராவில் கொடுத்த பிறகும் கூட. டைனோ சொன்னார் என்று அடம்பிடித்தால் எப்பூடி! :-))))))
Expand this comment »

Krishna Moorthy SAug 3, 2012


+kaveri ganesh பின்னிப் பெடல் எடுப்பதென்பது மிகக் கம்மியான மதிப்பீடு! :-)))))

பத்தி எழுத்து, வலைப்பதிவுகளின் எல்லையை நன்குணர்ந்து எழுதத் தெரிந்தவர் என்று நான் வியந்து ரசிப்பது ஆர்பிஆர் ஒருவரைத்தான்!

Dyno BuoyAug 3, 2012


கபீஷ்ஜி நான் சொன்னதை சரியாக பிடிச்த்திருக்கிறார்!

ஆர்பிஆர் சிறந்த பத்தி எழுத்தாளர் என்பதை நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதில் ஃபேக்சுவல் இன்டெக்ரிட்டி மிகவும் குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும், சுவாரஸ்யத்தை ஏற்ற அப்படி சொல்லியிருக்கிறார் என்று தாண்டி வந்துவிடுவேன்.

சுவாரஸ்யமாய் எழுதுகிறார், but not everything he writes is factual! He uses exaggeration to add the extra oomph! :)
Collapse this comment

Krishna Moorthy SAug 3, 2012


Dyno! I 've given ample reply for what is exaggeration and what is not!Your take on factual correctness, is disputable!
What I am highlighting is, his choice of words, to drive home a fact! Rather scoring a point, if you care!


Dyno BuoyAug 3, 2012


You seem to like him, I like him too. The difference crops at how much of validity could one attach to his articles - my take is to read his articles with a pinch of salt, you seem to trust his words for what they are. This now boils down to personal choice and I stand by mine! ;)

Krishna Moorthy SAug 3, 2012

+1

கொதிநிலைக்கெல்லாம் போகவேண்டாம்!

டைனோ! வாசிக்கிற எதையும் கேள்விக்கு உள்ளாக்காமல் ஏற்றுக் கொள்வதே இல்லை. அதனால் ஆர்பிஆர் அல்லது வேறு யாராக இருந்தாலும் சொல்கிற அத்தனையையும் மாற்ற முடியாத இறைவசனம் ரேஞ்சுக்கு வைத்துப் பார்ப்பதில்லை.சொல்வதை எப்படி நச்சென்று சொல்கிறார் என்ற பிரமிப்பு, கூடவே அவர் சொல்லாத, எனக்கு வேறு வழிகளில் தெரியக் கிடைத்த விஷயங்களையும் பொருத்திப் பார்த்து, இந்த எழுத்து இன்னமும் கூர்மையாக இருப்பதை,ரசிக்கிறேன், பகிர்கிறேன்! அவ்வளவுதான்!

Kabheesh SAug 3, 2012

+1

அவ்ளோ தானா

senshe sensheYesterday 12:42 AM

+1

//படங்களில் பேதி மருந்து சாப்பிட்டு விட்டது போல் ஒரு முழி.சமயத்தில் திருட்டு முழி போலவே இருக்கும். ஒரு நிமிஷம் ‘two toilet' போய் விட்டு வந்தால் சிரமம் குறைந்து விடும் என்பது போல ஒரு restlessness.சிரிப்பதற்கே கூட தேவையேயில்லாமல் ரொம்பத்தான் டென்ஷன் ஆவார்.//

படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன். :)))

ஆர்பிஆர் எழுத்துகளோட எளிமைக்காகவே எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

Krishna Moorthy SYesterday 9:30 AM


வாங்க சென்ஷி!
ஆர்பி ஆர் எழுத்தை, மாம்ஸ் எளக்கியம் மட்டுமே பேசத் தெரிந்த கபீஷுக்கு சரியாப் புரியலையாம்! டைனோவுக்கோ, அவர் எழுதுகிற செய்திகளில் உண்மையின் கலப்பு ரொம்பக் கம்மி, நெறைய மிகைப்படுத்தறார்னு குத்தமாப் படுதாம்!

எதையுமே மிகைப்படுத்தி மிகைப்படுத்தி வெளிச்சத்தில் வாழும் மனிதர்களின் இருண்ட பக்கமும் அதே மாதிரித்தான் இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன்! :-)))

.....

இன்று மீண்டும் கிருஷ்ணமூர்த்தி ப்ளாகில்

Kabheesh S1:11 PM (edited)
ஹலோ! நான் அவர தப்பா புரிஞ்சிருக்கேன்னு சொல்லிருக்கார். டைனோ என்ன சொல்ல வரார்னு நான் சொன்னேன் அஷ்டே. நான் வாசித்த வரையில் எனக்கும் அவரோட ஜாங்கிரி பிழியாத எளிமையான எழுத்து பிடிக்கும். அவர் எழுத்து பிடிக்கலன்னு சொல்றது தான் நியூஸ். அனேகமா ஜெமோ சித்தப்பூ உள்பட எல்லாருக்கும் பிடிக்கும்னே நெனக்கறேன்.

5 comments:

  1. ராஜநாயஹம் சார்!நான் மிகவும் நேசிக்கிற எழுத்து உங்களுடையது! நாலைந்து வரிகளில், ஒரு குணச்சித்திரத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற உங்களுடைய எழுத்துக்கு ரசிகனாக இருப்பது என்னுடைய பாக்கியம்!

    ReplyDelete
  2. நண்பர்களின் உரையாடலை ரசித்தேன்... நன்றி...

    ReplyDelete
  3. ஆர்பிஆர்-ஜி -

    உங்கள் எழுத்தை எனக்கும் மிகவும் பிடிக்கும். நான் ப்ளஸில் எழுதியதால் நீங்கள் மிக மன வருத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது! கண்டிப்பாக உங்கள் மனம் நோக வைக்க வேண்டி அவ்வாறு கூறவில்லை. உங்கள் எழுத்துக்களையும் பத்திகளையும் பல நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். பலமுறை பிடிஎஃப் ஆக மாற்றி அனுப்பியும் இருக்கிறேன்!

    நீங்கள் ஆர்பிஆர் சீன் பற்றி கூறியது எனக்கு அதீதமாக தெரிந்தது. மேலும் சினிமாவில் அவ்வாறாய் அனைவரும் ஏற்றிவிடுவார்கள் என்பதை அறிந்ததால் அவ்வாறு கூறினேன்! மற்றபடி உங்கள் மேல் எனக்கு க்ரோதமோ கோவமோ இல்லை. ஜெமோவை எத்தனை அளவு ரசிக்கிறேனோ அதைப்போலவே உங்கள் எழுத்தையும் ரசிக்கிறேன். பத்தி எழுத்தை உங்களவு யாரும் எழுதிவிடமுடியாது!

    நான் டேடா அனலைஸ் செய்தது உலகின் பெரிய க்ரெடிட் கார்ட் நிறுவனத்திற்காக. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சேர்த்துதான். உலகின் அதிக சேல்ஸ் ஆகும் நாள் க்ருத்துமஸுக்கு முந்தைய சனி. நாங்கள் அனலைஸ் செய்யும் போது வாரயிறுதி முழுவதற்கும் கணக்கிடுவோம்.

    அதுதவிர அதிக மக்கள் கடைகளுக்கு போகும் நாள் தாங்ஸ் க்விங் டேக்கு அடுத்து வரும் ப்ளாக் ப்ரைடே. Lot of people usually get confused between most traffic and most sales. During Black Friday we have more people walking into store and not all of them translate to sale. Where as the Saturday before Christmas translates into sales and hence the highest sale world over. இது உலகம் முழுவதற்கும். அமேரிக்காவில் கடத்த பத்தாண்டுகளில் (2010க்கு முன்) மூன்று முறை ப்ளாக் ப்ரைடே சேல்ஸ் க்ருஸ்துமஸுக்கு முந்திய சனிக்கிழமை சேல்ஸை ஓவர்டேக் செய்துள்ளது!

    ****

    இதை அந்த பதிவிலேயே சொல்லாததற்கு காரணம் இதன் மூலம் அந்த பத்தியின் சுவாரஸ்யத்திற்கு எந்தவித வேல்யூ அடிஷனும் நிகழ்ந்துவிடுவதில்லை. உங்கள் சுவரஸ்யமான பதிவில் அது ஒரு சின்ன விசயம் என்பதால் அதை எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றவில்லை! மற்றபடி வேறேதும் இல்லை!

    புரிதலுக்கு நன்றி!

    நட்புடன் டைனோ

    ReplyDelete
  4. டைனோ சார்!
    உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
    ஆர்பிஆர் சீன் பற்றி நான் மிகையாக எழுதவில்லை.அதோடு என்னை யாரும் மட்டை கட்டவில்லை.ந்ஜமாகவே ‘ ’அழைத்தால் வருவேன்’ ராசுக்குட்டி இரண்டு பட அனுபவங்களிலும் என்னைப் பற்றி மற்றவர்கள் பரவசம் இயல்பாகவே நடந்தது. கலைந்த ஒப்பனையில் நான் கொஞ்சம் வடிகட்டித்தான் எழுதினேன்.முழுக்க நான் ஒரு விஷயத்தை மறைத்து எழுதியுள்ளேன். அதையும்சேர்த்து இன்னும் விரிவாய்த்தான் எழுதியிருக்கவேண்டும்.ஆனால் அப்படி எழுதியிருந்தால் அது தான் ’மிக அதீதமாய்’ நீங்கள் உணரும்படியாயிரு்ந்திருக்கும். அவ்வளவு திருப்பங்கள் ராசுக்குட்டிஆர்.பி.ராஜநாயஹம் காட்சியில்.எனக்கு ஏனோ அதையும் விரித்தே எழுதியிருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

    உங்கள் டேடா அனலைஸ் விஷயங்களை Christ Never Laughed பதிவில் சேர்த்து விடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  5. Don't kick yourself for these kind of silly errors, standard disclaimers apply for even well researched articles. Let's not hang on to little things like date, time etc.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.