Share

Aug 15, 2012

கானா பிரபா ப்ளாகில்

கானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி” ப்ளாகில்
 “கள்ளத்தீனி” ஆகஸ்ட் 14 பதிவிலிருந்து


களவாடல் என்று வரும்போது 'கையும் களவுமாகப்' பிடிபட்ட இன்னொரு பிரபல களவைச் சுட்டுகிறேன்.
இது பிரபல பத்திரிகை குமுதம் இதழின் வேலை.
இணைய உலகில் சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கு R.P.ராஜநாயஹம் அவர்களைத் தெரியாமல் இருந்தால் வியப்பு. சினிமாவில் பின்னணியில் உழைத்து முன்னுக்கு வராவிட்டாலும் அவரிடம் ஏராளமான அனுபவக் கதைகள் உண்டு. தவிர, தனக்குத் தெரிந்த விடயங்களையும் நேர்த்தியாகக் கொடுப்பதில் தனித்துவமானவர். இது அவரின் வலைப்பதிவு முகவரி http://rprajanayahem.blogspot.com.au/

ராஜநாயஹம் அவர்களது வலைப்பதிவில் மறைந்த கலைஞர் காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி வந்த எழுத்துக்களை வரிவிடாமல் களவாடி குமுதம் சுனில் கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்திருக்கிறார்கள் இப்படி


இது குறித்து அவரின் பகிர்வு இங்கே

அறிவுத்திருட்டு இப்போது பரவலாக இசை, தொழில்நுட்பம் என்று உயர்ரகமாக அமைந்துவிட்ட வேளை, தமிழ் எழுத்துச் சூழலில் பதிவர்களின் படைப்புக்களைச் சுரண்டி விட்டு நன்றி 'இணையம்' என்று பொதுவில் போடுவதும், இல்லாவிட்டால் தாங்களே எழுதியது போலவும் பத்திரிகை உலகம் நடந்து கொள்ளும் பாங்கு புதிய விடயம் அல்ல. அதுவும் இலங்கையில் இருந்து வெளிவரும் வார, சஞ்சிகைகளிலும் இதே கூத்துத்தான்.

http://rprajanayahem.blogspot.in/2009/12/kanapraba-to-scanman.html

http://www.madathuvaasal.com/2012/08/14.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

1 comment:

  1. //அதுவும் இலங்கையில் இருந்து வெளிவரும் வார, சஞ்சிகைகளிலும் இதே கூத்துத்தான்//

    உண்மை. பெரும்பாலான சினிமாச் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் என்னென்னவெல்லாமோ தமிழகப் பதிவர்களின் படைப்புகளை சுட்டு அல்லது அட்டக்கொப்பி பண்ணிவிட்டு பொத்தாம்பொதுவாக ‘நன்றி - இணையம்’ என்று போடுவதே ‘எங்கள்’ வழக்கம் ஐயா! என்ன செய்ய...? மிகவும் வரட்சியான சூழலில் வாழ்கிறோம்..ஹெ ஹெ ஹெ!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.